ஹோம் /நியூஸ் /entertainment /

ஹாஸ்பிடலில் சமந்தா.. தீயாய் பரவிய தகவல்.. விளக்கமளித்த மேனேஜர்!

ஹாஸ்பிடலில் சமந்தா.. தீயாய் பரவிய தகவல்.. விளக்கமளித்த மேனேஜர்!

சமந்தா

சமந்தா

Samantha: சமந்தா அவரது வீட்டில் நலமுடன் இருப்பதாக அவரது மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு அவரது மேலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்

  தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் மயோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்.

  இந்நிலையில் சமந்தாவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்காக அவர் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

  இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு அவரது மேலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். சமந்தா அவரது வீட்டில் நலமுடன் உள்ளதாகவும், உடல்நலப்பிரச்னை என வெளியான தகவல் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Samantha