முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Samantha: பிரபல பாலிவுட் நடிகையிடம் வாய்ப்பை இழந்த சமந்தா?

Samantha: பிரபல பாலிவுட் நடிகையிடம் வாய்ப்பை இழந்த சமந்தா?

சமந்தா

சமந்தா

புஷ்பா 2-வில் மலைக்கா ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடுவது கிட்டத்தட்ட உறுதி என்கிறது தெலுங்கு சினிமா வட்டாரம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை சமந்தா பிரபல பாலிவுட் நடிகையிடம் வாய்ப்பை இழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

தென்னிந்திய நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். அதோடு அவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகையின் கால் ஷீட் நிரம்பியிருந்தாலும், முக்கியமான வாய்ப்பு ஒன்றை பாலிவுட் நடிகையிடம் அவர் இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புஷ்பா படத்தில் ’ஊ அண்டாவா மாமா’ என்ற பாடலில் தனது பெப்பி டான்ஸ் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் சமந்தா. இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் பிரபலங்கள் பலர், இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டகிராமில் வெளியிட்டனர். இதையடுத்து புஷ்பா 2 படத்தில் மீண்டும் சமந்தாவை ஆட வைக்க, தயாரிப்பாளர்கள் ஆர்வமாக இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவர் மீண்டும் ஒரு பாடலுக்கு ஆட விரும்பாததால், அந்த வாய்ப்பு பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவிற்கு கிடைத்துள்ளதாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனுஷின் கேப்டன் மில்லர் பூஜை படங்கள்!

top videos

    படக்குழு இதைப் பற்றி எதையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், புஷ்பா 2-வில் மலைக்கா ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடுவது கிட்டத்தட்ட உறுதி என்கிறது தெலுங்கு சினிமா வட்டாரம். அல்லு அர்ஜுன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா மந்தனா, விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    First published:

    Tags: Actress Samantha, Tamil Cinema