ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வரவேற்பை பெறும் சமந்தாவின் ‘யசோதா’ பட ட்ரெய்லர்… ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்!!

வரவேற்பை பெறும் சமந்தாவின் ‘யசோதா’ பட ட்ரெய்லர்… ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்!!

யசோதா ட்ரெய்லரில் சமந்தா

யசோதா ட்ரெய்லரில் சமந்தா

நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகின்ற நிலையில் நேற்று வெளியான ட்ரெய்லர் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள யசோதா படத்தின் ட்ரெய்லர் வரவேற்பை பெற்று வருகிறது. யூடியூப் ட்ரெண்டிங்கில் இந்த ட்ரெய்லர் முதலிடத்தை பிடித்துள்ளது.

  இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

  வரும் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகின்ற நிலையில் நேற்று வெளியான ட்ரெய்லர் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

  Shalini Ajith - Shamlee: ஷாலினி அஜித் - ஷாமிலியின் தீபாவளி கொண்டாட்ட படங்கள்!

  தற்போது யசோதா ட்ரெய்லர் 6 மில்லியன் பார்வைகளைக் கடந்து 7 மில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

  ' isDesktop="true" id="826726" youtubeid="7rsRx_VtlQU" category="cinema">

  இந்தப் படத்தை ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ளனர். மணி சர்மா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

  சைன்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் ஜானரில் யசோதா படம் உருவாகியுள்ளது. இதன் ட்ரெய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்பால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

  துணிவு VS வாரிசு... 8 ஆண்டுகளுக்கு பின் திரையரங்கில் மோதும் அஜித்- விஜய் படங்கள்

  இதேபோன்று சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. குணசேகர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

  இதைத் தவிர்த்து விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் சமந்தா நடித்து வருகிறார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actress Samantha, Kollywood