முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் சர்ச்சை இயக்குனர்களின் படத்தில் சமந்தா...!

மீண்டும் சர்ச்சை இயக்குனர்களின் படத்தில் சமந்தா...!

சமந்தா

சமந்தா

பிரபல ஓடிடி தளத்துக்காக ராஜ் & டிகே இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தி பேமிலி மேன் போல இது சீரிஸ் அல்ல, திரைப்படம்.

  • Last Updated :

தி பேமிலி மேன் சீரிஸை உருவாக்கி, இயக்கிய ராஜ் & டிகே இயக்கத்தில் மேலும் ஒரு படம் நடிக்கிறார் சமந்தா.

ஆந்திராவைச் சோந்த ராஜ் & டிகே இந்தியில்தான் படங்கள் இயக்கியிருக்கிறார்கள். அவர்கள் உருவாக்கி இயக்கிய வெப் தொடர் தி பேமிலி மேன். முதல் சீஸனில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளை பின்புலமாக வைத்து எடுத்தனர். முக்கிய வேடத்தில் மனோஜ் பாஜ்பாயும், ப்ரியாமணியும் நடித்திருந்தனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாவது சீஸனில் ஈழ விடுதலைப்போராளிகளை வில்லன்களாக சித்தரித்து எடுத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதில் ஈழப்போராளியாக சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. எனினும் சர்ச்சைக்குரிய படத்தில் நடித்ததற்காக கண்டனங்களும் முன்வைக்கப்பட்டன. சீரிஸ் வெளியாகி பல மாதங்களுக்குப் பிறகு சமந்தா அது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

தற்போது சாகுந்தலம், காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களில் நடித்து வருகிறவர், பிரபல ஓடிடி தளத்துக்காக ராஜ் & டிகே இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தி பேமிலி மேன் போல இது சீரிஸ் அல்ல, திரைப்படம்

Also read... லலிதம் சுந்தரம் - தம்பிக்காக மஞ்சு வாரியர் தயாரிக்கும் படம்...!

top videos

    ராஜ் & டிகே அமேசானுக்காக புதிய வெப் தொடர் ஒன்றை தற்போது இயக்கி வருகின்றனர். ஷாகித் கபூர் முதன்மை வேடத்தில் நடிக்கும் அதில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியும், ராஷி கண்ணாவும் நடிக்கின்றனர்

    First published:

    Tags: Actress Samantha