சமந்தா போட்ட ட்வீட் - சமாதானமடைந்த ரசிகர்கள்!

சமந்தாவின் வாழ்த்துக்கு படத்தின் நாயகி சாய் பல்லவி நன்றி தெரிவித்துள்ளார். ஆனால், நாக சைதன்யா இன்னும் சைலண்ட் மோடில்தான் இருக்கிறார்.

சமந்தாவின் வாழ்த்துக்கு படத்தின் நாயகி சாய் பல்லவி நன்றி தெரிவித்துள்ளார். ஆனால், நாக சைதன்யா இன்னும் சைலண்ட் மோடில்தான் இருக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சமந்தா போட்ட ட்வீட்டால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இப்போதைக்கு அவர்கள் விவாகரத்து செய்யப் போவதில்லை என்ற நிம்மதியையும் அந்த ட்வீட் கொடுத்துள்ளது.

சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக தைன்யாவுக்கும் கருத்து வேறுபாடு, இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற செய்தி கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. சமந்தாவோ, நாக சைதன்யாவோ இதுபற்றி எந்த விளக்கம் அளிக்காதது, இது உண்மைதானோ என்று ரசிகர்களையும் சந்தேகப்பட வைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், சமந்தா தனது மாமனாரும் நடிகருமான நாகார்ஜுனின் பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டார். ஆனால், தனக்கு வாழ்த்து சொன்ன பலருக்கும் நன்றி தெரிவித்த நாகார்ஜுன் சமந்தாவுக்கு பதிலளிக்கவில்லை. இதனால், சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து வதந்தி மேலும் ஊக்கம் பெற்றது.

நேற்று நாக சைதன்யா நடித்துள்ள லவ் ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் வெளியானது. சேகர் கம்மூலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் இந்தப் படம் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு தியேட்டரில் உங்களை சந்திக்கப் போவதில் மகிழ்ச்சி என நாக சைதன்யா ட்விட்டரில் ட்ரெய்லரை பகிர்ந்திருந்தார்.



Also read... போட்ட காசு கிடைச்சிடுச்சி - தலைவி தயாரிப்பாளர்...!

அதற்கு சமந்தா, 'வின்னர். மொத்த டீமுக்கும் வாழ்த்துகள்' என்று பதிலளித்தார். இரண்டு பேருக்கும் நடுவில் கருத்து வேறுபாடு இருந்து பிரியப் போகிறார்கள் என்றால் நாக சைதன்யாவின் ட்வீட்டுக்கு எதற்கு சமந்தா பதிலளிக்கப் போகிறார், இது எல்லாமே வதந்தி என்று சமந்தா ரசிகர்கள் சமாதானமடைந்துள்ளனர்

சமந்தாவின் வாழ்த்துக்கு படத்தின் நாயகி சாய் பல்லவி நன்றி தெரிவித்துள்ளார். ஆனால், நாக சைதன்யா இன்னும் சைலண்ட் மோடில்தான் இருக்கிறார். ஆக, வதந்தி இன்னும் வதந்தி என கன்பார்ம் ஆகவில்லை.
Published by:Vinothini Aandisamy
First published: