கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோருக்கு சவால் விடுத்த நடிகை சமந்தா

நடிகை கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோருக்கு சமந்தா சவால் விடுத்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோருக்கு சவால் விடுத்த நடிகை சமந்தா
நடிகை சமந்தா
  • Share this:
உலகம் முழுவதும் சமூக வலைதளங்களின் வாயிலாக புதிய புதிய சேலஞ்ச்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர்.

தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தனறு மரம் நடும் க்ரீன் இந்தியா சேலஞ்ச் என்ற ஒன்றை தொடங்கி வைத்தார். இதை நடிகர் பிரபாஸ் உள்ளிட்டோர் ஏற்று மரம் நட்டனர். இதன் தொடர்ச்சியாக நடிகர் நாகர்ஜூனா மரக்கன்று நட்டு அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தார். அவரது சவாலை ஏற்று நடிகை சமந்தாவும் மரக்கன்றுகளை நடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் தான் 3 மரக்கன்றுகளை நட்டு வைத்தது போல் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா தனது தோழி ஷில்பா ஆகியோரும் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு க்ரீன் இந்தியா சேலஞ்ச் விடுத்திருக்கிறார் சமந்தா.


தனது சேலஞ்சை ஏற்றுக் கொண்டதற்காக தெலங்கானா எம்.பி. சந்தோஷ் குமார், நாகர்ஜூனா, சமந்தா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading