• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விவாகரத்து விவகாரம்: வைரலாகும் சமந்தாவின் மீம் போஸ்ட்

விவாகரத்து விவகாரம்: வைரலாகும் சமந்தாவின் மீம் போஸ்ட்

சமந்தா

சமந்தா

ஊடகங்களை விமர்சிக்கும் விதமாக மீம் ஒன்றை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

  • Share this:
    ஊடகங்களை விமர்சிக்கும் விதமாக நடிகை சமந்தா வெளியிட்ட மீம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்தார். திருமணத்துக்கு பின்னர் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். குடும்பத்திலும் நல்ல மருமகள் என்ற பெயர் எடுத்திவிட்டார். திருமணத்துக்கு பின்னர் ட்விட்டரில் கணவரின் குடும்பப்பெயரான அக்கினேனியை தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக்கொண்டு சமந்தா அக்கினேனி  என மாற்றிக்கொண்டார்.

    நடிகை சமந்தா ( Image :Instagram @samantharuthprabhuoffl)


    Also Read: பிக் பாஸில் ஜி.பி.முத்து.. கதறும் ரசிகர்கள்

    இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ட்விட்டரில் தன் பெயரை முழுமையாக நீக்கிவிட்டு ஆங்கில எழுத்தான ‘S’  என்று மாற்றினார். சமந்தா என்ன நினைத்து மாற்றினாரோ என்னவோ தெலுங்கு மீடியாக்களில் சமந்தாவுக்கு நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள். சமந்தா தன் தோழி வீட்டில் இருக்கிறார் என செய்திகள் வெளியாகின.

    samantha akkineni, samantha akkineni movies and tv shows, samantha akkineni age, samantha akkineni children, samantha akkineni and naga chaitanya, samantha akkineni instagram, samantha akkineni family, samantha akkineni father, samantha akkineni religion, சமந்தா, நடிகை சமந்தா, சமந்தா அக்கினேனி, சமந்தா குடும்பம், சமந்தா நாக சைத்தன்யா, சமந்தா கணவர், சமந்தா இன்ஸ்டாகிராம்
    நாகர்ஜூனாவுடன் சமந்தா


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுகுறித்து சமந்தாவோ, நாக சைதன்யாவோ எதுவும் பேசவில்லை. இதற்கிடையில் ஆகஸ்ட் 29-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். நாகர்ஜூனாவுக்கு சமந்தா வாழ்த்து சொல்கிறாரா என தெலுங்கு மீடியாக்கள் காத்திருந்தன.உங்கள் மீதான எனது மரியாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எப்பொழுதும் உங்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வேண்டும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா.. எனக் கூறி வதந்தி பரப்பியவர்களின் வாயை அடைத்தார்.

    சமந்தா இன்ஸ்டா பதிவு


    இந்நிலையில் ஊடகங்களை விமர்சிக்கும் விதமாக மீம் ஒன்றை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நாய் ஒன்று ஆக்ரோஷமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஊடகங்கள் குறித்து கூறப்படுவது என்றும். அமைதியாக இருக்கும் நாய்களின் புகைப்படத்தை பகிர்ந்து ஊடகத்தின் உண்மை நிலை என்றும் குறிப்பிட்டுள்ளார். சமந்தா குறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்களை விமர்சிக்கும் வகையில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: