நம்பர் 1 நடிகை என்ற இடத்தைப் பிடிக்கும் ஆசை தனக்கு இல்லை எனத் தெரிவித்திருக்கிறார் நடிகை சமந்தா.
படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.
இந்து - கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நாகசைத்தன்யா - சமந்தாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த நேரத்தில் தனது கணவர் நாக சைத்தன்யாவை பிரிவதாக அறிவித்தார் சமந்தா. மறுபுறம் தாங்கள் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக சைத்தன்யாவும் அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பாரதி கண்ணம்மாவால் நிறைய இழந்தேன் - அஞ்சலி உருக்கம்
இதையடுத்து சுற்றுலா, கோயில் என பயணத்தைத் தொடர்ந்த சமந்தா அதன் பிறகு படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்நிலையில் அவ்வப்போது தனது ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடுவதை வழக்கமாகவும் வைத்திருகிறார்.
ரஜினிகாந்த், கமல் ஹாசன், பிரபு கலந்துக் கொண்ட பிரமாண்ட திருமணம்!
அப்படி சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிய சமந்தாவிடம் சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் ஆர்வம் உள்ளதா? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, ’நடிகையாக நம்பர் 1 இடத்தில் இருக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சினிமாவில் நம்பர் 1 என்பதை விட, நிறைய நல்ல படங்களில் நடிக்க வேண்டும்’ என பதிலளித்திருக்கிறார் சமந்தா.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.