ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உடல்நிலை பாதிப்பு - சமந்தா எடுத்த திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

உடல்நிலை பாதிப்பு - சமந்தா எடுத்த திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்துவரும் சமந்தா அந்தப் படத்தின் பணிகளை முடித்தபிறகு இருந்து ஓய்வுபெற திட்டமிட்டுள்ளாராம். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

'தி ஃபேமிலி மேன் 2', 'புஷ்பா' பட ஓ அண்டவா பாடலுக்கு பிறகு நடிகை சமந்தா இந்திய அளவில் பிரபலமாக இருக்கிறார். நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதற்கான காரணமாக பல்வேறு வதந்திகள் பரவினாலும் சமந்தா எதற்கும் பதிலளிக்காமல் நடிப்பில் கவனம் செலுத்திவந்தார்.

'யசோதா' என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் சமந்தா நடிப்பில் சகுந்தலம் மற்றும் குஷி போன்ற படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.

இதையும் படிக்க| அட்லி - பிரியாவின் 'வாரிசு' - வளைகாப்பு நிகழ்ச்சியில் நேரில் வாழ்த்திய விஜய் - வைரலாகும் படங்கள்

இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக மையோசிடிஸ் என்ற அரிதான தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டார். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

சமீபத்தில் யசோதா படம் தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பு குறித்து மனம் திறந்தார். அதில், '' நல்ல நாட்களும் மோசமான நாட்களும் என் வாழ்க்கையில் மாறி மாறி வருகின்றன. சில நாட்களில் படுக்கையிலிருந்து எழுந்திருப்பது கூட சிரமமானதாக இருக்கும். சில நாட்கள் எனக்கு இருக்கும் பிரச்னைகளை எதிர்த்து நான் போராட விரும்புவேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே நடிகை சமந்தா நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்துவரும் சமந்தா அந்தப் படத்தின் பணிகளை முடித்தபிறகு இருந்து ஓய்வுபெற திட்டமிட்டுள்ளாராம்.

மையோசிடிஸ் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த சமந்தா, அடுத்ததாக தென் கொரியா செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.  இதனால் தற்போது ஒப்பந்தமான பாலிவுட் படங்களிலிருந்தும் விலகவுள்ள முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

First published:

Tags: Bollywood, Cinema, Samantha