• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்த சமந்தா!

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்த சமந்தா!

நயன்தாரா - விக்னேஷ் சிவனுடன் சமந்தா

நயன்தாரா - விக்னேஷ் சிவனுடன் சமந்தா

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர்.

  • Share this:
    நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா.

    94-வது ஆஸ்கார் விருதுகள் அடுத்த ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விருதில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் 14 இந்திய திரைப்படங்களை அனுப்ப நடுவர் குழு முடிவு செய்துள்ளது. இதில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ’கூழாங்கல்’ என்ற திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.

    பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ள இந்த படம் குடிகார தந்தைக்கும் அப்பாவி மகனுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் “டைகர் விருது” பெற்றது இந்த கூழாங்கல் திரைப்படம்.

    இதையடுத்து தற்போது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், பிரபலங்களும், ரசிகர்களும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை சமந்தா, நயன் - விக்கி மற்றும் படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: