Home /News /entertainment /

பல்லாவரம் டூ பான் இந்தியா ஸ்டார்.. கோலிவுட், டோலிவுட்டில் கலக்கும் தமிழ் பெண் சமந்தா!

பல்லாவரம் டூ பான் இந்தியா ஸ்டார்.. கோலிவுட், டோலிவுட்டில் கலக்கும் தமிழ் பெண் சமந்தா!

சமந்தா

சமந்தா

த்ரிஷாவுக்கு பின் அந்த இடத்தில் பொன் வசந்தமாக அமர்ந்தவர் நடிகை சமந்தா.

    பான் இந்தியா ஸ்டாரான சென்னைப் பெண் நடிகை சமந்தாவின் திரைப்பயணம் பற்றிய ஒரு தொகுப்பு. 

    தமிழ் சினிமா உலகில் ஒரு தமிழ்ப் பெண் முன்னணி கதாநாயகியாக ஜொலிப்பது குதிரை கொம்பாகவே இருந்தது. 90களில் அக்கதையை மாற்றி சாதித்து காட்டினார் த்ரிஷா. அவருக்கு பின் அந்த இடத்தில் பொன் வசந்தமாக அமர்ந்தவர் நடிகை சமந்தா. சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவரான சமந்தா , கெளதம் மேனன் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியும் அப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் கதாநாயகியாகவும் நடித்தும் ஒரே சமயத்தில் தமிழ் தெலுங்கு ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்.

    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்தை பாராட்டிய மிஷ்கின்!

    ரவிவர்மன் இயக்கிய ‘மாஸ்கோவின் காவிரி’, அதர்வா கதாநாயகனாக அறிமுகமான ‘பானா காத்தாடி’ படங்களில் நாயகியாய் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சமந்தா. அப்போதே சமந்தாவின் க்யூட்டான தோற்றத்தில் மயங்கிய சினிமா ரசிகர்கள் நூல் அறுந்த பட்டமாய் தங்கள் மனங்களை தொலைத்தனர்.

    ஜூனியர் என்.டி.ஆருடன் ‘பிருந்தாவனம்’, மகேஷ்பாபுவுடன் ‘தூகுடு’ எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஈகா’ என தெலுங்கில் ஸ்டாராக ஜொலித்த சமந்தா கெளதம் மேனனின் ‘நீதானே என் பொன் வசந்

    தம்’ படத்தில் ஜீவாவின் காதல் கண்மணியாக நடித்து காதல் கண்ணதாசன்களின் கனவு நாயகி ஆனார்.

    துல்கர் சல்மான் நடிப்பில் உருவான 'சீதா ராமம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    சூர்யாவுடன் ’அஞ்சான்’…. விக்ரமுடன் ’பத்து எண்றதுக்குள்ள”… சிவகார்த்திகேயனுடன் ‘சீம ராஜா’… தனுஷுடன் ‘தங்க மகன்’ என முன்னணி நாயகர்களின் நாயகி ஆகி ’சமத்து பெண் சமந்தா’ என்று பெயர் பெற்றார். மேலும் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் சினிமாவைக் கலையாகவும் தொழில்முறை உணர்வுடனும் அணுகும் அவரது பாங்கை சொல்லியது.

    மேலும் விஜயுடன் 'கத்தி', 'தெறி', 'மெர்சல்' என வரிசையாக மூன்று ஹிட் திரைப்படங்களில் நடித்து சிகரத்தைத் தொட்டார் . இம்மூன்று திரைப்படங்களிலும் தனக்கான பாத்திரத்தை பாங்கோடு ரசிக்கும்படி வார்த்தார் சமந்தா. அதோடு சிம்ரன், த்ரிஷா வரிசையில் விஜய்யுடன் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன நடிகையாக விஜய் ரசிகர்களின் அன்பையும் பெற்றார்.

    இதுமட்டுமின்றி பாலிவுட்டில் கால் பதித்துள்ளார் சமந்தா. யசோதா எனும் படத்தில் கதாநாயகியாகவும், இளம் நட்சத்திர நடிகர் வருண் தவானுடன் சிட்டாடல் திரைப்படத்திலும் பிசியாக நடித்து வருகிறார் நம்ம ஊரு சமந்தார.

    பெரிய நட்சத்திரமாக தான் மாறிய பின்னும் கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் இரண்டாம் நிலை கதாபாத்திரத்திலும்……’புஷ்பா’ திரைப்படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ என்ற ஒரு குத்து பாடலுக்கு அட்டகாச ஆட்டம்போட்டும்… ‘காத்துவாக்குல ரெண்டு காதலில் கதீஜாவாகவாக தோன்றியும் சினிமா மீதான தன் காதலை சொன்ன சமந்தா. சாமானியப் பெண்களின் தன்னம்பிக்கையின் அழகிய ஓவியமே!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Actress Samantha, Kollywood, Tamil Cinema

    அடுத்த செய்தி