சமந்தா அணிந்து வந்த ஆடை குறித்து இணையத்திலும், அதற்கு வெளியேயும் விமர்சனம் செய்து வந்தவர்களுக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.
திரைத்துறையில் இருக்கும் பெண்களையும், விவாகரத்து பெற்றுக் கொள்ளும் நடிகைகளையும் கொச்சையான மொழியில் விமர்சிப்பதை ஒரு தொழிலாக வைத்திருக்கிறது ஒரு கும்பல். இவர்களுக்கு சம்பந்தப்பட்ட நடிகைகள் அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்தாலும் இவர்கள் திருந்துவதாக இல்லை. நாக சைதன்யா உடனான விவாகரத்து அறிவிப்பை சமந்தா வெளியிட்ட பிறகு அவரையும் அந்த கும்பல் விடாமல் துரத்தி விமர்சனம் செய்து வருகிறது.
சமந்தாவும் தனது விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னால் தனது சுதந்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக முன்பைவிட மார்டன் உடைகளை அதிகமாக அணிந்து வருகிறார். இது பலரது கண்களை உறுத்துகிறது. அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தில், ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆடியதையும் இதைபோல் விமர்சித்து இருந்தனர். சில தினங்கள் முன்பு விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா, மேற்கத்திய பெண்களை போன்ற ஸ்லீவ்லெஸ் மேலாடை அணிந்து வந்திருந்தார். அதனை இணையத்தில் பலரும் கொச்சையான மொழியில் விமர்சித்திருந்தனர். அதற்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.
மனைவி திருமணத்திற்கு வந்த கணவன் முத்துராசு... விறுவிறுப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் 2!
"நாம் 2022-ல் இருக்கிறோம். பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை மட்டமாக எடை போடுவதை முதலில் அனைவரும் நிறுத்த வேண்டும். அவர்களை விமர்சிப்பதை விட்டு விட்டு நம்மை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்" என கூறியுள்ளார். அதாவது வெட்டியாக நடிகைகளின் உடையைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் வாழ்க்கையில் உருப்படியாக எதையாவது செய்யுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார் சமந்தா. ஆனாலும் கலாச்சார கும்பல் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளுமா என்பதுதான் தெரியவில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.