உங்களுடன் இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை சமந்தா அளித்த பதில் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.
இந்து - கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நாகசைத்தன்யா - சமந்தாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த நேரத்தில் தனது கணவர் நாக சைத்தன்யாவை பிரிவதாக அறிவித்தார் சமந்தா. மறுபுறம் தாங்கள் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக சைத்தன்யாவும் அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார் சமந்தா. சமீபத்தில் அவர் நடித்துள்ள சகுந்தலம் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த சமந்தாவுக்கு லைக்குகளையும், கமெண்டுகளையும் குவிக்கத் தொடங்கினர்.
தனுஷ் எனக்கு மருமகன் இல்லை - அதிர்ச்சியைக் கிளப்பிய ரஜினிகாந்த்
இதைத் தொடர்ந்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் இதுவரை இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா? உங்களுடன் இனப்பெருக்கம் செய்து கொள்ள எனக்கு ரொம்ப ஆசையாக உள்ளது (Have u reproduced cuz I wanna reproduce u) என்ற சர்ச்சையான கேள்வியைக் கேட்டார்.
நம்பர் 1 நடிகையாகும் ஆசை இல்லை - சமந்தா ஓபன் டாக்!
அதற்கு நிதானமாக பதிலளித்த சமந்தா, முதலில் ஒரு வாக்கியத்தில் 'இனப்பெருக்கம்' எனும் வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்பதை கூகுளில் தேடி கற்றுக் கொள்ளுங்கள் (How to use 'reproduce' in a sentence. Should have googled that first?) என்று பதிலடி கொடுத்தார்.
சமந்தாவின் இந்த பதில் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.