Home /News /entertainment /

சகுந்தலையாக சமந்தாவின் அழகிய தோற்றம்!

சகுந்தலையாக சமந்தாவின் அழகிய தோற்றம்!

சமந்தா

சமந்தா

சாகுந்தலம் திரைப்படம் தெலுங்கில் தயாராகி இருந்தாலும் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

தெலுங்கில் தயாராகியிருக்கும் சமந்தாவின் புதிய படம் சாகுந்தலம்.  இதில் சகுந்தலையாக சமந்தா நடித்துள்ளார்.  இதன் பர்ஸ்ட் லுக்கில் சமந்தாவின் சகுந்தலை தோற்றம் இடம்பெற்றுள்ளது.

சாகுந்தலம் திரைப்படம் தெலுங்கில் தயாராகி இருந்தாலும் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. குணசேகர் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். சாய் மாதவ் வசனங்கள் எழுதியுள்ளார். நீலிமா குணாவும், தில் ராஜுவும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தை தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடித்துள்ளனர்.

ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

அதிதி பாலன், அனன்யா நாகள்ளா, பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, கபீர் பேடி, மதுபாலா உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். பிரமாண்டமாக தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் முதல் பார்வையை இன்று வெளியிட்டுள்ளனர். மான்களும், மயில்களும், அன்னங்களும், முயல்களும் புடைசூழ சமந்தா அமர்ந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக்  மிரட்டலாக உள்ளது. குறிப்பாக சகுந்தலையாக அவரது தோற்றம் சிறப்பாக உள்ளது.

வலிமை படத்தைப் பார்த்த பெற்றோர்... மனம் நெகிழ்ந்த அஜித்!

சமந்தா நடிப்பில் தமிழில் விரைவில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகிறது. இதில் அவருடன் நயன்தாராவும், விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து சமந்தாவின் பான் -  இந்தியா திரைப்படமான சாகுந்தலம் வெளியாகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Samantha

அடுத்த செய்தி