சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலாக, ஒரு சினிமா நடிகைக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டால், அதோடு சேர்த்து அவரின் ஆக்டிங் கேரியரும் முடிந்தது என்று அர்த்தம். ரசிகர்களின் மனதில் ஒரு கனவு கன்னியாக நீடிக்கும் பட்சத்தில் தான் ஒரு சினிமா நடிகைக்கு மவுசு மற்றும் மார்க்கெட் எல்லாமே! திருமணமாகி, ஒருவருக்கு மனைவியாகி "அந்த" அந்தஸ்த்தை இழந்து விட்டால் அவ்வளவு தான், குறிப்பிட்ட நடிகைக்கு ரசிகர்கள் எண்ட் கார்டு போட்டு விடுவார்கள்!
இந்த நிலை, கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது. எப்படி ஒரு சினிமா நடிகையின் வெற்றிகள் கொண்டாடப்படுகிறதோ, அதேபோல ஒரு அவரின் திருமணமும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதே திருமணம் விவாகரத்தில் முடிந்தாலும் கூட ரசிகர்கள் ஆறுதல்களை வழங்க தவறுவதில்லை; குறிப்பிட்ட நடிகை திரைப்படங்களுக்கு ஆதரவு அளிக்க தயங்குவதே இல்லை!
இந்த அனைத்து விஷயங்களுடனும் ஒத்துப்போகும் ஒரு பிரபல நடிகை தான் - சமந்தா ருத் பிரபு. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவரான சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், பிறகு விவாகரத்து செய்து கொண்டதும், அதற்கு பின்னரே சமந்தாவின் 'மார்க்கெட் வேல்யூ' எகிறியுள்ளதும், முன்னெப்போதை விடவும் சமந்தாவின் பெயர் ஆங்காங்கே அடிபடுவதும் நாம் அறிந்ததே!
also read : ‘பீஸ்ட்’ படத்தை கலாய்த்த பிரபல பாடகர்.. வச்சி செய்யும் விஜய் ரசிகர்கள்..
எவன் என்ன சொன்னா நமக்கு என்ன? எவன் எப்படி வாழ்ந்த நமக்கு என்ன ? என்கிற பாணியில் சமந்தா டாப் கியர் போட்டு போய்க்கொண்டே இருக்கிறார். அவ்வப்போது சோஷியல் மீடியாவை பயன்படுத்தி ரசிகர்களுடன் உரையாடுவதையும் தொடர்கிறார். தொடராமல் இருக்க முடியுமா? ஆயிரமோ, பத்தாயிரமோ அல்ல. இன்ஸ்டாகிராமில் சமந்தாவை மொத்தம் 23.1 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள் அல்லவா?
அப்படியான ஒரு லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் கேள்வி - பதில் செக்ஷனில் நடிகை சமந்தா, தனக்கு காது குத்தியதை பற்றியும், டாட்டூ போடுவது குறித்தும் சுவாரசியமான பதில்களை வழங்கி உள்ளார்
#Samantha pic.twitter.com/0otU0BU5uF
— Parthiban A (@ParthibanAPN) April 18, 2022
ஒரு ரசிகர், "உங்களுக்கு காது குத்திய இடம் எப்படி சரியானது?" என்று கேட்க, "நல்லவேளை இந்த கேள்வியை கேட்டீங்க! நான் அனுபவித்த வலியை யாரிடமாவது பகிர வேண்டும் அல்லவா.. என்று கூறி, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, காது குத்திய இடத்தை கையில் பிடித்துக்கொண்டு, "இது சரியாக ஆறு மாதங்கள் ஆனது! நான் ஏன் இதை செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை" என்று பதில் கூறி உள்ளார், சமந்தா.
மற்றொரு ரசிகர், "வருங்காலத்தில் ஏதாவது டாட்டூ போட விரும்புகிறீர்கள் என்றால், அது என்னவாக இருக்கும்?" என்று கேட்க, முகத்தை படு சீரியஸாக வைத்துக்கொண்டு.. "ஒருபோதும்.. எப்போதும் டாட்டூ போடாதீங்க.. இது தான் என் அட்வைஸ்" என்று கூறி உள்ளார், சமந்தா!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Samantha