தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோருடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். 1987-ம் ஆண்டு கேரள மாநிலம் ஆழப்புலாவில் பிறந்த சமந்தா சென்னை பல்லாவரத்தில் தான் வளர்ந்தார். ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்ற அவர் 2010-ம் ஆண்டு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார்.
2017-ம் ஆண்டு நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்ட சமந்தா, தன் இளம் வயது குறித்தும், பல்லாவரத்துடனான நினைவுகள் குறித்தும் தனது இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ளார். அதில் பல்லாவரம் மலையை வீடியோவாக பதிவிட்டிருக்கும் அவர், “இந்த மலை நான் வளரும் போது என் வீட்டு மாடியிலிருந்து தெரியும். எனக்குப் பிடித்த இடம். எந்த ஒரு மனிதரையும் விட என்னை இதற்கு நன்றாக தெரியும்.
View this post on Instagram
பரீட்சை நாட்களின் பரபரப்பான காலை தருணங்கள். எல்லாக் கடவுள்களுக்கும் நான் செய்த நிறைவேற்றாத சத்தியங்கள். என் முதல் காதல், இதயம் உடைந்தது, என்னுடைய நண்பரின் இறப்பு, கண்ணீர், பிரியா விடைகள். எனவே தான் என்னுடைய மலைக்கு தனிப் பதிவு அவசியம்” இவ்வாறு நடிகை சமந்தா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
சமந்தாவின் இந்த பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Samantha, Kollywood