• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’எப்படி இவை வருகின்றன என தெரியவில்லை’ - வதந்திகள் குறித்து சமந்தா வருத்தம்

’எப்படி இவை வருகின்றன என தெரியவில்லை’ - வதந்திகள் குறித்து சமந்தா வருத்தம்

சமந்தா

சமந்தா

நாங்க ஒண்ணாத்தான் இருக்கோம், பிரியப்போவதில்லை என்று இருவரும் பதில் அளிக்கவில்லை.

  • Share this:
    தெலுங்கு மீடியாக்களின் என்டர்டெயினராக மாறி வருகிறார் சமந்தா. அவரது திருமண வாழ்க்கைக் குறித்து தினம் ஒரு வதந்தி மீடியாவில் வருகிறது. இதற்கெல்லாம் பிள்ளையார்சுழி போட்டது, அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டது தான்...

    சமந்தா அக்கினேனி என கணவரின் குடும்பப் பெயருடன் இருந்த தனது பெயரை S என்ற ஆங்கில் எழுத்தாக வலைத்தளங்களில் சமந்தா மாற்றியதும், கணவர் நாக சைதன்யா குடும்பத்துடன் சமந்தாவுக்கு பிரச்சனை, அதனால்தான் பெயரை மாற்றிவிட்டார் என முதல் கல் எறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாக சைதன்யா - சமந்தாவுக்குள் விரிசல், இருவரும் பிரியப் போகிறார்கள், 50 கோடி ஜீவனாம்சம் என்று அடுத்தடுத்து கற்கள் விழுந்தன.

    அப்படியெல்லாம் இல்லை என நாக சைதன்யாவோ, சமந்தாவோ ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். யார் இதை கிளப்பி விடுறாங்கன்னு தெரியலை, எங்களுக்கும் பிரைவெட் லைஃப் இருக்கு, எதை எப்போ பேசணும்னு முடிவு பண்றது நான்தானே தவிர மத்தவங்க இல்லை என்றெல்லாம் சம்பந்தமில்லாமல் இருவரும் கம்பு சுற்றினார்களே தவிர, நாங்க ஒண்ணாத்தான் இருக்கோம், பிரியப்போவதில்லை என்று ஒருவரி பதில் அளிக்கவில்லை.

    இதன் தொடர்ச்சியாக, சமந்தா மும்பையில் செட்டிலாகப் போகிறார் என இன்னொரு குண்டை மீடியா போட்டது. இதற்கு பதிலளித்த சமந்தா, "இந்த வதந்திகள் எங்கேயிருந்து வருதுன்னே தெரியலை. ஆனா, மத்த 100 வதந்திகள் மாதிரி இதுவும் உண்மையில்லை. ஹைதராபாத்தான் என்னுடைய வீடு. இங்கதான் நான் இருப்பேன். ஹைதராபாத்தான் எனக்கு வாழ்க்கையில் எல்லாம் தந்தது. தொடர்ந்து இங்கேதான் வசிப்பேன்" என்று கூறியுள்ளார்.

    இதே மாதிரி உடைச்சிப் பேசியிருந்தா 100 வதந்திகள் ஏன் வரப்போகிறது?



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: