தனது கணவர் மற்றும் செல்லப்பிராணியுடன் நேரத்தைச் செலவிடும் சமந்தா!

தனது கணவர் மற்றும் செல்லப்பிராணியுடன் நேரத்தைச் செலவிடும் சமந்தா!
சமந்தா
  • Share this:
கொரோனா பரவுவதைத் தடுக்க வெளியில் செல்லாமல் வீட்டில் தங்கியிருக்கும் நடிகை சமந்தா, தனது கணவர் மற்றும் செல்லப் பிராணியுடன் நேரத்தைச் செலவிட்டு வருவதை #Quaranteam என்னும் புகைப்படத்தைப் பகிர்ந்து தெரிவித்திருக்கிறார்,

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருவதைத் தடுக்க நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தமிழக அரசு வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடக்கூடாது. தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 

அரசின் இந்த முயற்சிக்கு திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை சமந்தா வீட்டை விட்டு வெளியே வராமல் தனது செல்லப்பிராணியான ஹஷ் மற்றும் அவரது கணவர் நாகசைதன்யாவுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அதை வெளியுலகுக்குத் தெரிவிக்கும்படி அமைந்துள்ளது சமந்தாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படம்.


கணவர், மற்றும் தனது ஹஷ் நாய்க்குட்டியை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தைப் பார்த்தவர்கள் அவரவரது கருத்துகளை பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 
View this post on Instagram
 

#quaranteam


A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on


மேலும் படிக்க: தளபதி 65 : மிக விரைவில் விஜய்யுடன்... சூசகமாக சொன்ன நடிகை!First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்