நடிகைகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? சமந்தா வருத்தம்

நடிகைகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? சமந்தா வருத்தம்
நடிகை சமந்தா
  • Share this:
முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவினாலும் அவர்களை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் ஆனால், நடிகைகளுக்கு அந்த நிலை ஏற்பட்டால் பழி சொல்கிறார்கள் என்று நடிகை சமந்தா வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஜானு’. தமிழில் ‘96’ என்ற டைட்டிலில் வெளியாகி ஹிட் அடித்த இத்திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் விஜய் சேதுபதி கேரக்டரில் சர்வானந்தும், த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்திருந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சமந்தாவை தோல்வி பட நடிகை என்று சிலர் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் இந்த விமர்சனத்துக்கு பதிலளித்த நடிகை சமந்தா, “ஒரு நடிகர் தொடர்ந்து தோல்வி படங்களைக் கொடுத்தாலும், அவர் நடிக்கும் படங்களை திரையரங்கில் பார்க்கும் மக்கள் கொண்டாடுகிறார்கள். ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தாவிட்டாலும் அவரது முகத்தை திரையில் காண்பதற்காகவே திரையரங்குக்குச் செல்கிறார்கள். ஆனால் நடிகைகளின் படங்கள் வசூலைக் குவிக்காவிட்டால் எளிதில் பழி சொல்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: “விஷாலுக்கு இனிமேல்தான் இருக்கிறது ஆப்பு” - எச்சரிக்கும் மிஷ்கின்


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading