ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

த்ரிஷா, கீர்த்தி சுரேஷுடன் சமந்தா - வைரலாகும் புகைப்படம்!

த்ரிஷா, கீர்த்தி சுரேஷுடன் சமந்தா - வைரலாகும் புகைப்படம்!

கீர்த்தி - சமந்தா - த்ரிஷா

கீர்த்தி - சமந்தா - த்ரிஷா

த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் பார்ட்டியில் கலந்துக் கொண்டுள்ளார் சமந்தா.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நடிகைகள் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சமந்தா.

  சமந்தா தனக்கு விருப்பமான விஷயங்களை செய்து தனது ஓய்வு நேரத்தை அனுபவித்து வருகிறார். தான் வளர்த்து வரும் நாய்களுடன் நேரம் செலவழிப்பது முதல் தனது நண்பர்களுடன் வேடிக்கை பார்ப்பது வரை, எல்லாவற்றையும் செய்து வருகிறார். தற்போது அவர் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ப்ரீதம் ஜுல்க்கருடனான தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

  சமீபத்தில் நாக சைதன்யாவுடனான தனது திருமண பிரச்சனைகள் குறித்து கேட்ட ஒரு நிருபருக்கு பதிலடி கொடுத்த சமந்தா தலைப்பு செய்தியாக மாறினார். கடந்த இரண்டு வாரங்களாக, சமந்தா மற்றும் சைதன்யா திருமணமான நான்கு வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்யப் போவதாக வதந்திகள் வலம் வந்தன.
   
  View this post on Instagram

   

  A post shared by S (@samantharuthprabhuoffl)  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  செப்டம்பர் 20-ம் தேதியான இன்று, சமந்தா இன்ஸ்டாகிராமில் தனது தொடர்ச்சியான படங்களைப் பகிர்ந்து, தனது வாரம் எப்படி இருந்தது என்பதை தெரியப்படுத்தினார். அவர் தனது சகாக்களான த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பிரபல ஒப்பனையாளர் ப்ரீதம் ஜுகல்கர் ஆகியோருடன் பார்ட்டியில் கலந்துக் கொண்ட படமும் அதில் இருந்தது. அதோடு சமந்தா சில தினங்களுக்கு முன்னர் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actress Samantha, Actress Trisha