கோவாவில் நடிகை சமந்தா கட்டும் அதி நவீன பண்ணை வீடு!

சமந்தா அக்கினேனி

தன் பெயரிலிருந்து அக்கினேனி என்பதை எடுத்துவிட்டு, சமந்தா பிரபு என்ற யூசர் நேமை அவர் வைத்திருந்தது, சமந்தாவுக்கும் அவரது கணவர் சைத்தன்யாவுக்கும் இடையே பிரச்னைகள் இருப்பதாக வதந்திகள் கிளம்பின.

 • Share this:
  நடிகை சமந்தா கோவாவில் கடற்கரையோர ஃபார்ம் ஹவுஸ் ஒன்றை கட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது அவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் கடைசி அட்டவணை படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இதில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

  இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், ’யே மாயா சேசவே’ படத்தில் தன்னுடன் நடித்த தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் சமந்தா. சமீபத்தில் ட்விட்டரில் சமந்தா அக்கினேனி என்ற தனது பெயரை ‘எஸ்’ என மாற்றினார். இது அவர் நடித்துள்ள சகுந்தலம் படத்தின் ப்ரோமோஷனுக்காகத் தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தன் பெயரிலிருந்து அக்கினேனி என்பதை எடுத்துவிட்டு, சமந்தா பிரபு என்ற யூசர் நேமை அவர் வைத்திருந்தது, சமந்தாவுக்கும் அவரது கணவர் சைத்தன்யாவுக்கும் இடையே பிரச்னைகள் இருப்பதாக வதந்திகள் கிளம்பின.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா சமீபத்தில் கோவாவில் ஒரு பெரிய இடத்தை வாங்கி, அங்கு ஒரு நவீன பண்ணை வீடு கட்டும் பணியைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கடற்கரைக்கு அருகில் ஒரு தனித்துவமான வீட்டை உருவாக்க சிறப்பு கட்டிடக் கலைஞர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இந்த புதிய வீட்டில் கிரகபிரவேசம் 2022-ன் பாதியில் நடக்கும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: