Samantha Akkineni Birthday: சமந்தாவை புகழ்ந்து பேசிய கீர்த்தி சுரேஷ், தமன்னா

Samantha Akkineni Birthday: சமந்தாவை புகழ்ந்து பேசிய கீர்த்தி சுரேஷ், தமன்னா

சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ், தமன்னா இருவரும் அவருக்கு வாழ்த்து சொன்னதோடு மட்டுமின்றி புகழ்ந்தும் பேசியுள்ளனர்.

சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ், தமன்னா இருவரும் அவருக்கு வாழ்த்து சொன்னதோடு மட்டுமின்றி புகழ்ந்தும் பேசியுள்ளனர்.

  • Share this:
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண்ணான சமந்தா இன்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வட இந்தியாவைச் சேர்ந்த நாயகிகள் மட்டுமே கோலோச்சி வந்த தமிழ் சினிமாவில் சென்னையில் பிறந்து, ஆந்திர தேசம் வரை ரசிகர்களை ஈர்த்த ஒருவர் சமந்தா.

மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தின் மூலம் 2010-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த சமந்தா, 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சமந்தா, இதே திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றார்.

நடிகை சமந்தா


இதனைத்தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் ‘நான் ஈ’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் புகழின் உச்சம் தொட்டார். சிறந்த நடிகைக்காக வழங்கப்படும் விருதினை தமிழில் நீதானே பொன்வசந்தம் திரைப்படத்திற்கும், தெலுங்கில் நான் ஈ திரைப்படத்திற்கும் ஒரே ஆண்டு பெற்று ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ரசிகர் கூட்டத்தை கவர்ந்ததால் தெலுங்கில் நானி, மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் தமிழில் விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் தன்னுடன் முதல் படத்தில் நடித்த நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு, தெலுங்கு சினிமாவின் மிகப் பெரிய குடும்பத்து மருமகளாக ஆந்திர தேசத்தில் குடியேறியுள்ள சமந்தா, திருமணத்துக்குப் பின்னும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

Ram Charan Samantha Akkineni rangasthalam movie to be released in 300 theaters in Tamil Nadu
சமந்தா


இன்று 34-வது பிறந்தநாள் காணும் சமந்தாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை கீர்த்தி சுரேஷ் ட்விட்டரில் சமந்தாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் காமன் டிபியை வெளியிட்டு வசீகரமான பெண் என்று புகழ்ந்துள்ளார். அதேபோல் நடிகை தமன்னா, மிகவும் அழகானவர் என்றும் நடிப்பில் திறமை வாய்ந்தவர் என்றும் புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: