Oscars 2020 | மூன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது 1917 திரைப்படம்...!

Oscars 2020 | 1971

Oscars 2020 | மூன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது 1917 திரைப்படம்...!
சிறந்த இசைக் கலவை, ஒளிப்பதிவு மற்றும் விசுவல் EFFECT என மூன்று பிரிவுகளில் 1917 படம் இதுவரை ஆஸ்கரை விருதினை வென்றுள்ளது.
  • Share this:
சிறந்த ஒலிக்கலவை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான ஆஸ்கரைத் தட்டிச் சென்றுள்ளது சாம் மெண்டெஸ் இயக்கிய 1917.

உலகப்போர்களைக் குறித்த திரைப்படங்கள் அடிக்கடி வெளியாவது வழக்கமான ஒன்றுதான். எதற்கெடுத்தாலும், உலகம் முழுவதும், போர் போர் என்று பேசிக்கொண்டிருக்கும் கற்பனாவாத தேசபக்தர்கள் அதிகரித்துக்கொண்டு வரும் சூழ்நிலையில், போர் எத்தனை கொடுமையானது என்பதையும், அது வெறும் உயிரிழப்பு தொடர்பான விஷயம் மட்டுமே அல்ல என்ற அழுத்திச் சொன்னது சாம் மெண்டஸின் 1917 திரைப்படம். ராணுவ வீரரான சாம் மெண்டெஸின் தாத்தாவான ஆல்ஃபிரட் மெண்டிஸ் சொன்ன கதைகளின் ஒரு சிறுபகுதிதான் இந்த 1917.

நாகரிகமடைந்ததாக தினமும் பறைசாற்றும் இவ்வுலகம், இனி எந்த யுத்தங்களையும்  நிகழ்த்துவதற்கு முயற்சி செய்யக்கூடாது என்பதை அழுத்திச் சொன்ன இந்த ஆண்டின் சிறந்த திரைப்படமான 1917-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading