புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள சமந்தா ஆடிய பாடல், இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கானை கவர்ந்திழுத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ பதிவு சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5மொழிகளில் வெளியிடப்பட்டது.
சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 365 கோடி ரூபாய் வரையில் வசூலித்தது. இந்தப்படத்தில் செம்மரக்கட்டை கடத்தும் கடத்தல்கார தாதாவாக அல்லு அர்ஜுன் நடித்திருப்பார்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் அப்பாவுக்காக மீனா எடுக்க போகும் அதிரடி முடிவு!
சாதாரண கூலித் தொழிலாளியாக செம்மரம் வெட்டும் பணியில் சேர்ந்த அல்லு அர்ஜுன், படிப்படியாக இந்த தொழிலில் உச்ச கட்டத்தை அடைவதை இயக்குனர் சுகுமாரன் சிறப்பாக விவரித்திருப்பார்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையில், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆகின. குறிப்பாக சமந்தா ஆடியா ‘உ சொல்றியா மாமா’ பாடல் அதிகம் ரசிக்கப்பட்டது. இதை இந்தியில் ‘உ அண்டாவா’ என்று பதிவு செய்திருந்தார்கள்.
கணவன் - மனைவி இனி ஒரே சேனலில்... ஷபானா - ஆர்யன் ஃபேன்ஸ் பயங்கர ஹேப்பி!
முதல் பாகம் மெகா ஹிட்டானதை தொடர்ந்து அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. இரண்டாம் பாகம் வெளிநாடுகளில் படமாக்கப்படும் என்ற தகவலால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கானிடம், உங்களுக்கு பிடித்தமான பாடல் எது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சல்மான், ‘உ அண்டாவா…’ என்று பாடிக்கொண்டே சென்றார்.
இந்த வீடியோ சல்மான் கான் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
♥️♥️♥️ https://t.co/UzkF0PVspl
— Samantha (@Samanthaprabhu2) June 26, 2022
Thaank You Dear Salman Bhaaaii@BeingSalmanKhan ❤️🙏🏻🤗🎶 https://t.co/3tjHbBM7Qu
— DEVI SRI PRASAD (@ThisIsDSP) June 26, 2022
இதனை படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும், சமந்தாவும் ரீ ட்வீட் செய்து நன்றியை தெரிவித்துள்ளார்கள்.
அடுத்த பாகத்திலும் சமந்தாவின் பாடல் இடம்பெறுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Salman khan, Samantha