சல்மான் கான் - பிரபுதேவா படத்தை கழுவி ஊற்றும் விமர்சகர்கள்

ராதே

சுவாரஸ்யமில்லாத கதை, பலவீனமான திரைக்கதை, யூகிக்கக் கூடிய காட்சிகள் என படத்தின் எந்த அம்சமும் ஈர்க்கவில்லை

 • Share this:
  பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா பதானி நடித்த ராதே - யுவர் மோஸ்ட் வான்டட் பாய் திரைப்படம் நேற்று வெளியானது. படம் மோசம் என்று அனைத்துத் தரப்பினரும் கழுவி ஊற்றுகிறார்கள்.

  மே 13-ம் தேதி ரம்ஜானை முன்னிட்டு ராதே வெளியானது. இந்தியாவில் கொரோனா பெருந்தோற்றால் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், திரிபுராவில் சில திரையரங்குகளில் மட்டுமே படம் வெளியானது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, யுஏஇ உள்பட சில வெளிநாடுகளில் 750 திரையரங்குகளில் படம் வெளியானது. மே 17 முதல் மேலும் சில நாடுகளில் வெளியாக உள்ளது.

  டிடிஹெச் மற்றும் ஓடிடி தளங்களில் பணம் கட்டி படத்தைப் பார்ப்பதற்கான வசதி செய்யப்பட்டிருந்தது. ராதே அதில் சாதனை படைத்திருக்கிறது. சரி, படம் எப்படி?

  சுவாரஸ்யமில்லாத கதை, பலவீனமான திரைக்கதை, யூகிக்கக் கூடிய காட்சிகள் என படத்தின் எந்த அம்சமும் ஈர்க்கவில்லை பெரும் ஏமாற்றம் என விமர்சகர்கள் படத்தை சல்லி சல்லியாக நொறுக்கி வருகின்றனர். பாலிவுட்டின் முன்னணி விமர்சகர் தரண் ஆதர்ஷ், பெருத்த ஏமாற்றம் என்று ஒருவரியில் படத்தை விமர்சித்திருப்பவர் ஐந்துக்கு இரண்டு ஸ்டார்கள் தந்துள்ளார்.

  தொடர் தோல்விகளை தந்துவரும் இயக்குனர் பிரபுதேவாவுக்கு மற்றுமொரு பெரும் தோல்வியாக இப்படம் அமைந்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: