ஒரே நேரத்தில் 12 லட்சம் பார்வையாளர்கள் - சர்வரை டேமேஜ் செய்த சல்மான் ரசிகர்கள்

சல்மான் கான்

ஒரே நேரத்தில் 12 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதனால் ஸீ 5 சர்வர் கிராஷானது.

  • Share this:
சல்மான் கானின் ரசிகர்களால் (வெறியர்கள் என்றும் சொல்லலாம்) ஸீ 5 ஓடிடி தளத்தின் சர்வர் க்ராஷானதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

2009 முதல் ரம்ஜானுக்கு தனது படத்தை வெளியிடுவதை ஒரு கொள்கையாக வைத்துள்ளார் சல்மான் கான். 2013 மட்டும் விதிவிலக்கு. அந்த வருடம் சல்மானின் படம் வெளிவரவில்லை. கொரோனா பேரிடர் காலமான இந்த வருடம் ராதே வெளியானது. பிரபுதேவா இயக்கிய படம். ரம்ஜானை முன்னிட்டு நேற்று வெளியிட்டனர். இந்தியாவில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ஸீபிளக்ஸில் 299 ரூபாய் செலுத்தி ஒருமுறை படத்தைப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஸீ 5 ஓடிடி தளத்தை சப்ஸ்கிரைப் செய்தும் படத்தைப் பார்க்கலாம்.

நேற்று மதியம் 12 மணிக்கு ஸீ 5 இல் படம் வெளியானது. அந்த நேரம் ஒரே நேரத்தில் 12 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதனால் ஸீ 5 சர்வர் கிராஷானது. பலரால் சப்ஸ்கிரைப் பண்ணவோ, படத்தைப் பார்க்கவோ முடியவில்லை. இந்தியாவில் இப்படியொரு சர்வர் டேமேஜ் நடப்பது இதுவே முதல்முறை. திரையரங்கில் டிக்கெட்டுக்கு முண்டியடித்த சல்மான் ரசிகர்கள் இந்தமுறை சப்ஸ்கிரைப் செய்ய முண்டியடித்ததன் விளைவு இது.

படம் சுமார், பெரும் ஏமாற்றம் என்று விமர்சகர்கள் ராதே படத்தை விமர்சித்தாலும், காசு குவிவதால் மகிழ்ச்சியில் உள்ளது, ராதேயின் உரிமையை 190 கோடிகளுக்கு வாங்கிய ஸீ நிறுவனம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: