Salman Khan: ஒரே நாளில் 42 லட்சம் பேர் பார்த்த சல்மானின் ராதே!

ராதே

முதல் நாளில் மட்டும் 42 லட்சம் பேர் ராதே படத்தை பார்த்ததாக ஸீ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    ரம்ஜானை முன்னிட்டு நேற்றுமுன்தினம் வெளியான சல்மான் கானின் ராதே கடும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலையில், வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது.

    இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், திரிபுராவில் மட்டும் சில திரையரங்குகளில் ராதே திரைப்படம் வெளியானது. வெளிநாடுகளில் ஆயிரத்துக்கு மேல் திரையரங்குகளில் வெளியாக வேண்டிய படம் சுமார் 750 திரையரங்குகளில் மட்டுமே வெளியானது. ராதேயின் பாக்ஸ் ஆபிஸ் பூஜ்ஜியம் என்று ஏற்கனவே சல்மான் கூறியிருந்தார். ஆனால், ஓடிடி மற்றும் டிடிஹெச்சில் படம் பட்டையை கிளப்பியது.

    ஸீபிளஸில் ராதே படத்தை ஒருமுறை பார்ப்பதற்கு 299 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல் குறிப்பிட்ட சில டிடிஹெச்சிலும் படத்தைப் பார்க்க இதே தொகை நிர்ணயிக்கப்பட்டது. ஸீ 5 ஓடிடி தளத்துக்கு ஒரு வருட சப்ஸ்கிரைப் செய்தும் படத்தைப் பார்க்கலாம் என அறிவித்திருந்தனர். மே-13-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஓடிடியில் படம் வெளியானது.

    முதல் நாளில் மட்டும் 42 லட்சம் பேர் ராதே படத்தை பார்த்ததாக ஸீ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராதே இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஓடிடியில் வெளியானது. அதன் மொத்த கணக்கே இந்த 42 லட்சம். ஆஸ்திரேலியாவில் இந்தப் படம் 66 திரையிடல்களில் 35.77 லட்சங்களையும், நியூசிலாந்தில் 19 திரையிடல்களில் 5.89 லட்சங்களையும் முதல் நாளில் வசூலித்துள்ளது.

    இரண்டாவது நாளில் ஆஸ்ட்திரேலியாவில் 69 திரையிடல்களில் 54.93 லட்சங்களையும், நியூஸிலாந்தில் 26 திரையிடல்களில் 9.97 லட்சங்களையும் கைப்பற்றியுள்ளது. முதல்நாளை விட இரண்டாவது நாளில் அதிக வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: