Home /News /entertainment /

நயன்தாரா படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்கள்!

நயன்தாரா படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்கள்!

சல்மான் கான் - சிரஞ்சீவி

சல்மான் கான் - சிரஞ்சீவி

காட்பாதர் திரைப்படத்தை கொனிடெலா ப்ரொடக்ஷன் கம்பெனியும், சூப்பர் குட் பிலிம்ஸும் இணைந்து தயாரித்து வருகின்றன.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் திரைப்படம் தெலுங்கில் தயாராகி வருகிறது. நயன்தாரா முக்கியமான வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் இந்தியின் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்துள்ளார்.

மலையாளத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் லூசிபர். இந்தப் படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். மோகன்ராஜா இந்த ரீமேக்கை இயக்கி வருகிறார். மோகன்லால் நடித்த வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.

ரஜினியை காட்டிக் கொடுத்த சிகரெட் வெளிச்சம்... தளபதி சுவாரஸ்ய கதை!

இந்தப்படத்தில் சல்மான்கான் முக்கியமான வேடம் ஒன்றில் நடிப்பதாக கூறப்பட்டது. அந்த செய்தியை ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்தோம். தற்போதைய செய்தி, காட்பாதர் படப்பிடிப்பில் சல்மான் கான் சிரஞ்சீவியுடன் இணைந்துள்ளார். காட்பாதர் திரைப்படத்தை கொனிடெலா ப்ரொடக்ஷன் கம்பெனியும், சூப்பர் குட் பிலிம்ஸும் இணைந்து தயாரித்து வருகின்றன.

காத்திருப்பு முடிந்தது... குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

ஹரிஷ் உத்தமன், ஜெயப்பிரகாஷ், சச்சின் கடேகர், வம்சி கிருஷ்ணா, நாசர் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். ராம்சரண், அனுஷ்கா ஷெட்டி, சுருதிஹாசன் ஆகியோர் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, எஸ் தமன் இசையமைக்கிறார். சிரஞ்சீவி, ராம் சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா படத்தைத் தொடர்ந்து காட்பாதர் திரைக்கு வரவுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actress Anushka, Actress shruti Haasan, Nayanthara, Ram Charan, Salman khan

அடுத்த செய்தி