மோகன் ராஜா இயக்கி வரும் தெலுங்கு திரைப்படம் காட்ஃபாதர். இந்தப் படத்தில் கௌரவ வேடம் ஒன்றில் நடிக்க சல்மான் கான் கால்ஷீட் தந்துள்ளார்.
காட்ஃபாதர் திரைப்படம் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். சிரஞ்சீவி மோகன்லால் நடித்த வேடத்தில் நடிக்கிறார். மோகன் ராஜா படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க சல்மான் கானிடம் கேட்டிருந்தனர். அவரும் சம்மதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காட்ஃபாதர் படத்துக்கு அவர் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒரே ஷெட்யூல்டில் எடுக்க தீர்மானித்துள்ளனர்.
அரசியலில் இருந்து விலகியபின் சிரஞ்சீவி சினிமாவில் கவனம் செலுத்துகிறார். அதிகமும் ரீமேக் படங்களில் நடிக்கிறார். அவரது 150 வது படம் கத்தி ரீமேக். இப்போது லூசிபர் ரீமேக்கில் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் சிவா இயக்கிய வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கு போலா சங்கர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வேதாளத்தில் அஜித் நடித்த வேடத்தில் சிரஞ்சீவி நடிக்க, அவரது தங்கையாக லட்சுமி மேனன் நடித்த வேடத்தில் சாய் பல்லவியும், நாயகி ஸ்ருதிஹாசன் நடித்த வேடத்தில் தமன்னாவும் நடிக்கின்றனர். மேலும் சில மலையாள, தமிழ்ப் படங்களின் ரீமேக்குகளில் நடிக்கவும் சிரஞ்சீவி திட்டமிட்டுள்ளார்.

Also read... சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் வெளியீடு!
அரசியலில் இருந்து விலகியபின் சிரஞ்சீவி சினிமாவில் கவனம் செலுத்துகிறார். அதிகமும் ரீமேக் படங்களில் நடிக்கிறார். அவரது 150 வது படம் கத்தி ரீமேக். இப்போது லூசிபர் ரீமேக்கில் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் சிவா இயக்கிய வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கு போலா சங்கர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வேதாளத்தில் அஜித் நடித்த வேடத்தில் சிரஞ்சீவி நடிக்க, அவரது தங்கையாக லட்சுமி மேனன் நடித்த வேடத்தில் சாய் பல்லவியும், நாயகி ஸ்ருதிஹாசன் நடித்த வேடத்தில் தமன்னாவும் நடிக்கின்றனர். மேலும் சில மலையாள, தமிழ்ப் படங்களின் ரீமேக்குகளில் நடிக்கவும் சிரஞ்சீவி திட்டமிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.