முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Salman Khan: மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தெலுங்குப் படத்தின் ரீமேக்கில் சல்மான் கான்!

Salman Khan: மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தெலுங்குப் படத்தின் ரீமேக்கில் சல்மான் கான்!

சல்மான் கான்

சல்மான் கான்

கிலாடி திரைப்படத்தில் மாஸ் மகாராஜா என்று அழைக்கப்படும் ரவி தேஜா நடித்துள்ளார்.

  • Last Updated :

விஜய்யின் மாஸ்டர் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிப்பது ஏறக்குறைய உறுதியான நிலையில், மேலுமொரு தெலுங்குப் படத்தின் ரீமேக் உரிமையை சல்மான் கான் வாங்க உள்ளார்.

சென்ற மாதம் ரமலானை முன்னிட்டு வெளியான சல்மான் கானின் ராதே - யுவர் மோஸ்ட் வான்டட் பாய் திரைப்படம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. அரதப்பழசான கதையும், காட்சிகளும் ரசிகர்களின் பொறுமையை சோதித்தன. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் வெற்றிப் பெற்ற தென்னிந்தியப் படங்களின் ரீமேக்கில் நடிப்பது சல்மான் கானின் வழக்கம். அதன்படி விஜய்யின் மாஸ்டர் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கிறார். இது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், தெலுங்குப் படம் கிலாடியின் ரீமேக் உரிமையையும் அவர் வாங்க உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிலாடி திரைப்படத்தில் மாஸ் மகாராஜா என்று அழைக்கப்படும் ரவி தேஜா நடித்துள்ளார். ஆக்ஷன், காதல், காமெடி, சென்டிமெண்ட் கலந்த இந்தப் படத்தை எழுதி இயக்கியவர் ரமேஷ் வர்மா. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. மே 28-ம் தேதி திரைக்கு வர வேண்டிய படம் கொரோனா ஊரடங்கால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்தப் படத்தின் கதையில் கவரப்பட்ட சல்மான் கான் இதன் இந்தி ரீமேக்கில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

இவ்விரு படங்கள் தவிர கிக் 2, டைகர் 3, அன்டிம் - தி பைனல் ட்ரூத், கபி ஈத் கபி தீவாளி ஆகிய படங்களிலும் சல்மான் கான் நடிக்க உள்ளார்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Salman khan