பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை அவரது பண்ணை வீட்டில் வைத்து பாம்பு ஒன்று கடித்தது. விஷ முறிவு மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் அவரது உடல் நலம் முன்னேற்றம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சல்மான் கான். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திரையுலகில் ஹீரோவாக நடித்து வரும் அவருக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
தமிழில் பிக் பாஸை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதைப் போன்று, இந்தியில் பிக்பாஸை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். ஓய்வு நாட்களை சுவாரசியமாக கழிக்கும் அவருக்கு, மகாராஷ்டிரா ராய்கட் மாவட்டத்தில் பன்வேல் என்ற இடத்தில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. கொரோனா காலத்தில் இந்த வீட்டில் இருந்து கொண்டு, விவசாய, தோட்டப் பணிகளை சல்மான் கான் மேற்கொண்டிருந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.
இதையும் படிங்க : விக்கியை பார்த்து ரொமாண்டிக் லுக் விடும் நயன்தாரா
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 3 மணிக்கு சல்மான் கானை பாம்பு ஒன்று, அவரது பண்ணை வீட்டில் வைத்து கடித்தது. இதையடுத்து உடனடியாக அவர் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு விஷ முறிவு மருந்தைக் கொடுத்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஜொலிக்கும் உடையில் நடிகை ஆண்ட்ரியா
சல்மான் கானை கடித்த பாம்பு விஷத் தன்மை இல்லாதது என தற்போது தகவல் வெளிவந்துள்ளது. ஒருவேளை அதிக விஷம் கொண்ட பாம்பு அவரை கடித்திருந்தால் நிலைமை விபரீதமாக மாறியிருக்கும். இந்த சம்பவத்திற்கு பின்னர், சல்மான் கான் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களும், நலம் விரும்பிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : வேற லெவல் அழகில் ஐஸ்வர்யா மேனன் - போட்டோஸ்
ஷாரூக்கான் நடிக்கும் பதான் என்ற படத்தில் சல்மான் கான் கவுரவ தோற்றத்தில் இடம்பெறவுள்ளார். சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் விளம்பரத்திற்காக அந்த படத்தில் நடித்த ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., இயக்குனர் ராஜமவுலி ஆகியோரை வைத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தினார். இந்நிலையில் பாம்பு கடிக்கு சல்மான் கான் ஆளாகியிருப்பது இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Salman khan