25,000 தொழிலாளர்களுக்கு தலா 1,500 ரூபாய் - சல்மான் கான் அறிவிப்பு!

சல்மான் கான்

நடிகர் சல்மான் கான் 25,000 திரைப்பட தொழிலாளர்களுக்கு தலா 1,500 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

 • Share this:
  கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் 25,000 திரைப்பட தொழிலாளர்களுக்கு தலா 1,500 ரூபாய் வழங்குவதாக நடிகர் சல்மான் கான் அறிவித்துள்ளார். இதற்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  கொரோனா ஊரடங்கால் தினக்கூலி தொழிலாளர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். திரைத்துறையில் உள்ளவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களுக்கு உதவும்படி மேற்கிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் நடிகர்கள், தயாரிப்பாளர்களிடம் உதவி கோரியிருந்தது.

  இதனைத் தொடர்ந்து யாஷ் ராஜ் ஸ்டுடியோஸ் ஆதித்ய சோப்ரா, வயதான மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். நடிகர் சல்மான் கான் 25,000 திரைப்பட தொழிலாளர்களுக்கு தலா 1,500 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். உதவி பெறும் தொழிலாளர்களின் பட்டியலை சல்மான் கானிடம் சங்கம் தந்துள்ளது. அதனடிப்படையில் அவர்கள் வங்கிக் கணக்கில் இந்தப் பணம் செலுத்தப்படும்.

  சல்மான் கானின் இந்த உதவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சென்ற முறையும் சல்மான் கான் இதேபோல் உதவிகள் செய்தார். இப்போது, மும்பையில் பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் தினமும் உணவு வழங்கி வருகிறார் சல்மான் கான்.
  பேரிடர் காலத்தில் இதுபோன்ற மனிதாபிமான உதவிகள் மக்களின் நேர்மறையான ஊக்கமளிக்கும். சல்மான் கானுக்கு பாராட்டுகள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: