என்னை இளைய சகோதரன் போல் சல்மானும் ஷாரூக்கானும் பார்த்துக் கொண்டனர்: ஷோயப் அக்தர் நெகிழ்ச்சி

ஷாரூக், அக்தர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் தான் பாலிவுட் பிரபலங்களுடன் நேரத்தை செலவிட்ட காலங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

 • Share this:
  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் தான் பாலிவுட் பிரபலங்களுடன் நேரத்தை செலவிட்ட காலங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

  விளையாட்டுக்கான பிரத்யேக ஊடகம் ஒன்றின் யூடியூப் சேனலில் ஷோயப் அக்தர் கூறும்போது சல்மான் கானும், ஷாரூக் கானும் தன்னை தங்கள் தம்பி போல் எப்போதும் பார்த்துக் கொண்டனர் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

  “மும்பையில் ஷாரூக் கான், சல்மான் கான் உள்ளிட்டோரிடம் உரையாடுவதை எப்போதும் விரும்புவேன். இருவருமே என்ன தங்களது தம்பி போல் பார்த்துக் கொள்வார்கள்.

  Also Read: என் மீது திருட்டுப் பட்டம் கட்டுவதா?- இந்திய கிரிக்கெட் வீரர் வேதனை

  அவர்களின் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் இருக்கும் போது என்னை எப்போதும் நன்றாக கவனித்துக் கொள்வார்கள், அவர்களது இளைய சகோதரன் போல்தான் நான்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் இந்தியா வந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. என்னுடைய ஆதார் அட்டை, ரேஷன் அட்டையையும் மக்கள் கேட்கத் தொடங்கும் அளவுக்கு நான் இங்கு இருந்துள்ளேன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Also Read: ஆண்டர்சன் பிரச்னை: டீல் செய்ததில் யார் பெட்டர் கேப்டன்?- தோனியா கோலியா?- ஒரு பார்வை

  இந்தியா பற்றிய இனிய நினைவுகள் என்னை விட்டு அகலவில்லை. இந்தியாவுக்கு மீண்டும் வர கடவுளை பிரார்த்தித்து வருகிறேன். என் நண்பர்களிடம் நான் அடிக்கடி கூறுவது இதுதான் இந்தியாவும் பாகிஸ்தானும் விரைவில் உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் என்று. அப்படி நடந்தால் இந்தியாவுக்கு வரும் முதல் மனிதன் நான் தான், டன் கணக்கில் பணம் சம்பாதிப்பேன்” என்றார்.
  Published by:Muthukumar
  First published: