முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சித்து மூஸ்வாலாவைப் போல கொல்லப்படுவீர்கள்... நடிகர் சல்மான் கானிற்கு மிரட்டல் கடிதம்

சித்து மூஸ்வாலாவைப் போல கொல்லப்படுவீர்கள்... நடிகர் சல்மான் கானிற்கு மிரட்டல் கடிதம்

சல்மான் கான்

சல்மான் கான்

2018-ம் ஆண்டு மான் வேட்டையாடிய வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :

சித்து மூஸ்வாலாவைப் போல கொல்லப்படுவீர்கள் என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கானிற்கு மிரட்டல் கடிதம் வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் பகுதியில் நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கான் நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

சலீம் கான் வழக்கமான நடைபயணத்திற்கு பிறகு பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்துள்ளார். அப்போது அங்கிருந்த கடிதத்தில் சலீம் கான், சல்மான் கான் இருவரும் சித்து மூஸ்வாலாவை போல கொல்லப்படுவீர்கள் என்று எழுதப்பட்டிருபதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

அதைத்தொடர்ந்து காவல்துறையிடம் சலீம் கான் புகாரளித்துள்ளார். 2018-ம் ஆண்டு மான் வேட்டையாடிய வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ்வாலா கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். மன்சா மாவட்டத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கியால் சுட்டதில் சித்து மூஸ்வாலா உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read... தனுஷிற்கு ஜோடியாகும் நடிகை கிருத்தி ஷெட்டி... எந்த படத்தில் தெரியுமா?

இந்நிலையில் கொலை மிரட்டல் கடிதத்திற்கு பிறகு நடிகர் சல்மான் கான் குடும்பத்தினர் தங்கியுள்ள பாந்த்ராவில் அவர்களது அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி காவல் துறை பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment, Salman khan