முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'வீரம்' ஹிந்தி ரீமேக் - என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?! - சல்மான் கான் பட டீசரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

'வீரம்' ஹிந்தி ரீமேக் - என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?! - சல்மான் கான் பட டீசரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

அஜித் குமார் - சல்மான் கான்

அஜித் குமார் - சல்மான் கான்

'கைதி' படத்தின் ஹிந்தி ரீமேக்கான போலா படத்தின் டீசரும் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் சிவா கூட்டணி வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களில் இணைந்து பணியாற்றியிருந்தார்கள். இதில் விவேகம் படத்தைத் தவிர மற்ற 3 படங்களும் நல்ல வெற்றியைப் பதிவு செய்தன.

வீரம் படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 'கட்டமராயுடு' என்ற பெயரிலும், கன்னடத்தில் தர்ஷன் நடிப்பில் 'ஒடியா' என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. வேதாளம் திரைப்படம் தற்போது சிரஞ்சீவி நடிப்பில் 'போலா ஷங்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விஸ்வாசம் பட ரீமேக்கிலும் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் 'வீரம்' திரைப்படம் ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, ஜகபதி பாபு, பூமிகா, மாளவிகா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பின்னணி இசையை 'கேஜிஎஃப்' இசையமைப்பாளர் ரவி பஸ்ருர் கவனிக்க , பாடல்களுக்கு ஹிமேஷ் ரேஷ்மியா, ரவி பஸ்ரூர், சுக்பீர் சிங், தேவி ஸ்ரீ பிரசாத், பாயல் தேவ், அமல் மாலிக் என 6 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய, அனல் அரசு இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். சல்மான் கான் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஃபர்ஹாத் சம்ஜி இயக்கியுள்ளார்.

' isDesktop="true" id="879750" youtubeid="bGM490nJoDE" category="cinema">

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து 'இதை இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது' என தமிழ் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். சமீபத்தில் 'கைதி' படத்தின் ஹிந்தி ரீமேக்கான போலா படத்தின் டீசரும் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Salman khan