நயன்தாராவிற்கு எப்போது திருமணம்? கணித்து சொன்ன பிரபல உலகக்கோப்பை ஜோதிடர்

Vijay R | news18
Updated: July 16, 2019, 5:39 PM IST
நயன்தாராவிற்கு எப்போது திருமணம்? கணித்து சொன்ன பிரபல உலகக்கோப்பை ஜோதிடர்
நயன்தாரா திருமணம் எப்போது?
Vijay R | news18
Updated: July 16, 2019, 5:39 PM IST
உலகக் கோப்பை முடிவுகளை சரியாக கணித்து சொன்ன சேலம் இளம் ஜோதிடர் பாலாஜிஹாசன் நடிகை நயன்தாரவிற்கு எப்போது திருமணம் என்று கணித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இணையதளத்தில் ஜோதிடர் ஒருவரின் வீடியோ மிகவும் பிரபலமானது. அந்த வீடியோவில் உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு எந்த அணி முன்னேறுமென்று ஜோதிடர் பாலாஜிஹசன் கணித்திருந்தார். அவர் சொன்னது போன்றே இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறியது.

மேலும் இந்த தொடரில் நியூசிலாந்து கோப்பையை வெல்லும், தொடர் நாயகனாக கேன் வில்லியம்சன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார். நியூசிலாந்து நூழையில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டாலும் கேன் வில்லியம்சன் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜோதிடர் பாலாஜிஹாசனின் கணிப்பு தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.

நடிகை நயன்தாராவின் திருமணம் எப்போது என்றும் ஜோதிடர் பாலாஜிஹாசன் கணித்துள்ளார். நயன்தாராவின் ஜாதகப்படி அவருக்கு இந்த ஆண்டுக்குள் திருமணம் நடைபெறும் என்று கணித்துள்ளார். நயன்தாரா தற்போது இயக்குனர் விக்கேனஷ்வரனும் தற்போது காதலித்து வருகின்றனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் திருமணம் எப்போது என்று அறிவிக்கப்படமால் இருந்தது.

ஜோதிடர் பாலாஜிஹாசனின் கணிப்பால் இந்த ஆண்டிற்குள் திருமண அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் காத்துள்ளனர். மேலும் நயன்தாரா இந்த ஆண்டிற்குள் 2 வெற்றிப்படங்களை கொடுப்பார் என்றும் கணித்துள்ளார். நயன்தாராவின் கொலையுதிர் காலம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து வருவதால் இந்த 2 படங்களும் அவருக்கு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Also Watch

First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...