விஸ்வாசத்துடன் கனெக்ட் ஆன ‘Mr.லோக்கல்’!

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படம் காமெடி என்டெர்டெயினராக உருவாகிறது.

விஸ்வாசத்துடன் கனெக்ட் ஆன ‘Mr.லோக்கல்’!
சிவகார்த்திகேயன்
  • News18
  • Last Updated: February 9, 2019, 8:43 PM IST
  • Share this:
மிஸ்டர்.லோக்கல் படத்தை தமிழகத்தில் வெளியிடும் நிறுவனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீமராஜா படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படம் காமெடி என்டெர்டெயினராக உருவாகிறது.

சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை தன்வீ ஃபிலிம்ஸ் உடன் இணைந்து சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


இந்த நிறுவனம் இதற்கு முன்னதாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை திருச்சி மற்றும் தஞ்சையில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியிருந்தது. அதேபோல் இந்நிறுவனம் நடிகர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் தமிழக உரிமையை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சவுந்தர்யா திருமண வரவேற்பில் தனுஷ் ஏன் ஆர்வம் காட்டவில்லை தெரியுமா?ஒருபக்கம் இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் டீசர், டிரைலர், பாடல் வெளியீடு போன்ற புரமோஷன்கள் தேதிகளும் திட்டமிடப்பட்டு வருகின்றன.

தண்ணீர் நிரப்பினால் ஓடும் அதிசய கார் - வீடியோ

First published: February 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்