முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / புஷ்பா1-ல் சமந்தா.... 2-ல் சாய் பல்லவியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

புஷ்பா1-ல் சமந்தா.... 2-ல் சாய் பல்லவியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சமந்தா

சமந்தா

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, புஷ்பா 2 படத்தில் நடனமாடும் வாய்ப்பை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலை வாரி குவித்தது. இதன் காரணமாக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் புஷ்பா இரண்டாம் பாகம் தயாராகிவருகிறது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் ஒரு பெரும் காரணம்.

குறிப்பாக இந்தப் படத்தில் சமந்தா நடனமாடிய ஊ அண்டாவா என்ற பாடல் சென்சேஷனல் ஹிட். இந்த நிலையில் தற்போது உருவாகும் இரண்டாவது பாகத்தில் சமந்தா நடனமாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, புஷ்பா 2 படத்தில் நடனமாடும் வாய்ப்பை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாராம். இதற்காக அவர் 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளதாகவும் ஒரு தகவல் பரவிவருகிறது. விரைவில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

First published:

Tags: Actress Samantha, Sai pallavi