நடிகை சாய்பல்லவி மீதான ஹைதராபாத் போலீசாரின் நோட்டீசை ரத்து செய்ய முடியாது என தெலங்கானா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் ராணா டகுபதியின் ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ள ‘விரத பர்வம்’ திரைப்படம் கடந்த ஜூன் 17ம் தேதி வெளியானது.
படத்தில் நக்சல் தலைவனான ராணா டகுபதியை காதலிக்கும் பெண்ணாக சாய்பல்லவி நடித்திருந்தார். படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த சாய்பல்லவி யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
பேட்டியில், வன்முறை எழுச்சியை ஊக்குவிக்கும் ஒரு அரசியல் சித்தாந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது. அப்போது. கருத்து தெரிவித்த அவர் கடந்த மார்ச் மாதம் வெளியான 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் குறித்த தனது கண்ணோட்டை வெளிப்படுத்தினர்.
காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் அந்தக் காலக்கட்டத்தில் படுகொலை செய்யப்பட்டதை காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
அது வன்முறை என்றால், பசுவை அழைத்துச் செல்லும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷம் எழுப்பிச் சென்றதும் தவறு தான் எனக் குறிப்பிட்டு பேசினார். இதற்கும் காஷ்மீரில் நடப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
அவரது இந்தக் கருத்துக்கு பரவலான எதிர்ப்பும். ஆதரவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. சாய் பல்லவி தைரியமாக பேசி உள்ளார் என்றும், அவர் பேசியது சரிதான் என்றும் பலரும் ஆதரவுதெரிவித்தனர்.
Also read... மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் விக்ரம் உடல்நிலை குறித்து புதிய அப்டேட்
அதே சமயம் இந்துத்துவா ஆதரவாளர்கள், பாஜகவினர் உள்ளிட்டோர் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை அவர் அவமதித்துவிட்டார் என்றும், காஷ்மீர் பற்றி தெரியாமல் அவர் பேசி வருகிறார் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகை சாய்பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஹைதராபாத்தில் உள்ள சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் அகில் என்பவர் புகார் அளித்தார்.
புகாரில், நடிகை சாய் பல்லவி காஷ்மீர் பயங்கரவாதிகளை, பசு காவலர்களுக்கு சமம் என்று ஒப்பிட்டு பேசியது தவறு எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
சுல்தான் பஜார் போலீஸார், இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, சாய் பல்லவிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
அந்த நோட்டீசை ரத்து செய்யுமாறு தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் சாய் பல்லவி மனு தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில் அந்த நோட்டீஸ் சட்டவிரோதமானது, அநீதியானது மற்றும் சட்டத்தை மீறக்கூடியது என சாய்பல்லவி குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மனுவில் புகார்தாரரின் உணர்வுகள் ஏன் புண்பட்டது?, புகார் எதனைப் பற்றியது? என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சாய் பல்லவியின் மனுவை தள்ளுபடி செய்து அவர் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress sai pallavi