Home /News /entertainment /

Sara Tendulkar: சினிமாவில் அறிமுகமாகும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்?

Sara Tendulkar: சினிமாவில் அறிமுகமாகும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்?

சாரா

சாரா

சாரா விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகலாம் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    கிரிக்கெட் மேஸ்ட்ரோ சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தில் ஸ்டைல் குறிப்புகள், படங்கள், பயண குறிப்புகள் போன்றவைகளால் நிரம்பி வழிகின்றன. 2021-ல் மாடலிங் துறையில் அவர் அறிமுகமானபோது, சாரா பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து வைப்பார் என்ற பேச்சுகள் எழுந்தன.

    இந்நிலையில், சாரா விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகலாம் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிப்பில் மிகவும் ஆர்வமாக இருக்கும் அவர், சில பிராண்ட்களில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும், நடிப்பு வகுப்புகளுக்கு சென்றதாகவும் பிரபல பாலிவுட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Sara Tendulkar (@saratendulkar)






    ”பெரும்பாலும் தன்னைப் பற்றி வெளியில் எதையும் தெரிவிக்காத சாரா, தனது நடிப்பு திறமையால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தக்கூடும். அவர் மிகவும் திறமையானவர், அவருடைய பெற்றோர் சாரா எடுக்கும் முடிவை ஆதரிப்பார்கள்” என சாராவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bollywood, Sachin tendulkar

    அடுத்த செய்தி