Rockstar Kamalesh: ராட்சசியில் ஜோதிகாவை திருமணம் செய்துக்கொள்ள விரும்பிய சிறுவன் யார் தெரியுமா?

மாஸ்டர் கமலேஷ் - ஜோதிகா

ஜீவா - நயன்தாரா நடித்திருந்த திருநாள் படத்தில் நயன்தாராவுக்கு முத்தம் கொடுப்பதும் கமலேஷ் தான்.

  • Share this:
    ஜோதிகா நடித்த ராட்சசி படத்தில், ’என்ன கல்யாணம் பண்ணிக்கிறீங்களா’ எனக் கேட்கும் சிறுவன் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன.

    இயக்குநர் கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்த படம் ராட்சசி . இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்கர்ஸ் சார்பில், எஸ்.ஆர். பிரபு தயாரித்திருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு இப்படம் வெளியாகியிருந்தது. பள்ளி ஆசிரியையாக ஜோதிகா நடித்திருந்த ராட்சசி படத்தில், அதே பள்ளியில் படிக்கும் சிறுவன் ஒருவன், ’என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா’ எனக் கேட்பான். அந்த சிறுவன் யார் தெரியுமா?

    ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ’ச ரி க ம ப’-வில் பிரபலம் அடைந்த மாஸ்டர் கமலேஷ் தான் அந்த சிறுவன். இவருக்கு தற்போது ஏழு வயது ஆகிறது. கானா பாடல்கள் பாடுவதில் ஆர்வமுள்ள இவர், நிறைய தனித்துவமான பாடல்களைப் பாடியுள்ளார். தன்னை விட பெரியவர்களுடன் இணைந்து கானா பாடல்களைப் பாடி இணையத்தில் வெளியிட்டு, அதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதோடு ஜீவா - நயன்தாரா நடித்திருந்த திருநாள் படத்தில் நயன்தாராவுக்கு முத்தம் கொடுப்பதும் கமலேஷ் தான். ஜோதிகாவுடன் ராட்சசி படத்தில் நடித்ததைப் பற்றி ஒரு நேர்க்காணலில் பகிர்ந்துக் கொண்ட கமலேஷ், “என்ன நீ என் பொண்டாட்டியை லவ் பண்றேன்னு சொன்னியாமே, நைட் ஃபுல்ல உன்ன பத்தி தான் பேசிட்டு இருக்காங்க” என சூர்யா சொன்னதாகவும், அதற்கு, “அப்படி சொல்ல சொன்னாங்க, சொன்னேன்” என தான் கூறியதாகவும் கமலேஷ் கூறினார்.

    அதோடு தனது பிறந்தநாளுக்கு ரிமோட் கார் ஒன்றை பரிசளித்த ஜோதிகா, அனைவருக்கு பிரியாணி வாங்கித் தந்ததையும் குறிப்பிட்டார். தற்போது 7 வயதாகும் கமலேஷ், நடிப்பு, பாடல் ஆகியவற்றில் தனது திறமைகளை வெளிப்படுத்துவதை எதிர்கால திட்டமாகக் கொண்டிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: