கட்சியை பதிவு செய்ய வேண்டாம் - தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம்

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என இயக்குனர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார்.

கட்சியை பதிவு செய்ய வேண்டாம் - தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம்
எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் (வலது) பத்மநாபன்
  • Share this:
நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ‘விஜய் மக்கள் இயக்கத்தை’ அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

கட்சி குறித்த தகவல் வெளியான சில மணி நேரங்களில், கட்சிக்கும் தனக்கும் சம்மந்தமில்லை. ரசிகர்கள், நிர்வாகிகள் யாரும் இந்த கட்சியில் சேர வேண்டாம். என் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று விஜய் அறிக்கை வெளியிட்டார்.

இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர், எனக்கு பிடித்த பெயரில் மக்களுக்கு நல்லது செய்ய கட்சித் தொடங்கியுள்ளேன். தற்போது விஜய் விஷ வலையில் சிக்கியுள்ளார் என்றெல்லாம் ஊடகங்களில் பேட்டியளித்தார்.


இதற்கிடையே  பொருளாளராக நியமிக்கப்பட்ட விஜயின் தாயார் ஷோபா ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரை அடுத்து கட்சியின் தலைவர் பத்மநாபனுக்கு மிரட்டல்கள் வருவதாக தெரிவித்த அவர், எஸ்.ஏ.சிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார்.

மேலும் படிக்க: நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லையா?

இதுபற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்ட போது தன்னுடைய பயணம் தொடரும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என அவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். எதற்காக அவர் அந்த கடிதத்தை எழுதினார் என்ற விவரம் இதுவரை வெளிவரவில்லை.
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading