Home /News /entertainment /

விஜய் தலைமையில் நடந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் இரண்டாவது திருமணம்!

விஜய் தலைமையில் நடந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் இரண்டாவது திருமணம்!

எஸ்.ஏ.சந்திரசேகர் திருமணம்

எஸ்.ஏ.சந்திரசேகர் திருமணம்

விஜய் யார் கிட்ட வேணா பெருமையா சொல்லலாம், எங்கப்பா அம்மா கல்யாணம் என் தலைமையில தான் நடந்ததுன்னு.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  நடிகர் விஜய்க்கும் 6 வயது இருக்கும் போது தனக்கு இரண்டாவது முறை திருமணம் நடந்ததாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

  இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவர் எஸ்.ஏ.சந்திர சேகர். 1981-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன.

  தற்போது நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கி வருகிறார். அதோடு தனுஷின் கொடி, சிம்புவின் மாநாடு போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரகேசர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் இரண்டாவது முறையாக திருமணம் செய்துக் கொண்டதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

  அதில் “நான் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தேன், ஷோபா இந்து. சிவாஜி அவர்களின் மனைவி கமலாம்பாள் தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் செய்துக் கொண்டோம். அதன்பிறகு சர்ச்சுக்கு போனால், எல்லாரும் போவோம். கோயிலுக்குப் போனாலும் எல்லாரும் போவோம். திருப்பதி, வேளாங்கண்ணிக்கு போய் மொட்டை போட்டுருக்கோம். எந்த மதத்தையும் சாராமல் வாழ்க்கை போயிட்டு இருக்கு.

  பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ளும் ரஜினி - கமல்?

  SA Chandrasekhar Shoba second wedding led by Vijay, sa chandrasekhar second marriage, sa chandrasekhar shoba second marriage, sa chandrasekhar youtube, sa chandrasekhar youtube channel, sa chandrasekhar marriage photos, sa chandrasekhar, vijay chandrasekhar, Yaar Indha sac, sa chandrasekhar, vijay makkal iyakkam, sa chandrasekhar politics, vijay father, sa chandrasekhar interview, எஸ் ஏ சந்திரசேகர், விஜய், தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம், எஸ் ஏ சந்திரசேகர் அரசியல், எஸ் ஏ சந்திரசேகர் பேட்டி, எஸ் ஏ சந்திரசேகர் இரண்டாவது திருமணம்
  கிறிஸ்தவ முறைப்படி திருமணம்


  அப்புறம் ஒருநாள் நம்ம ரெண்டு பேரும் கிறிஸ்தவ முறைப்படி கல்யாணம் பண்ணிக்கலான்னு ஷோபா கேட்டா. ஒரு நாள் கூட நீ கிறிஸ்டியனாகிடுன்னு நான் ஷோபாவை சொன்னது கிடையாது. நாம் இருவரும் வெவ்வேறு படகில் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். இதில் பெரிய அலையோ அல்லது சுழற்சியோ வந்தால் இருவரும் ஒரே இடத்தில் கரை ஒதுங்க முடியாது, வெவ்வேறு திசையில் தான் இருப்போம் என ஷோபா சொன்னார். அதில் ஆயிரம் அர்த்தம் இருந்தது.  சரின்னு ரெண்டாவது கல்யாணம் முடிவாகிடுச்சு. இந்த கல்யாணத்து விஜய் தான் சாட்சி, அப்போ அவருக்கு 6 வயசு. கிறிஸ்தவ முறைப்படி நாங்க பண்ண ரெண்டாவது கல்யாணத்தப்போ கூட எங்கப்பா வரல. நுங்கம்பாக்கம் சர்ச்ல 1980-ல நடந்த எங்க ரெண்டாவது கல்யாணத்துல எங்க அம்மா உட்பட குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்துக் கிட்டாங்க. விஜய் யார் கிட்ட வேணா பெருமையா சொல்லலாம், எங்கப்பா அம்மா கல்யாணம் என் தலைமையில தான் நடந்ததுன்னு. இன்னொரு விஷயம் இந்த ரெண்டாவது கல்யாணம் நடக்கும் போது ஷோபா ரெண்டாவது முறையா கர்ப்பமா இருந்தா.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கர்ப்பமான ராசியோ இல்லை ரெண்டாவது கல்யாணம் பண்ண ராசியோ தெரியல, எனக்கு சட்டம் ஒரு இருட்டறை படம் இயக்குற வாய்ப்பு கிடைச்சது” எனத் தெரிவித்துள்ளார்.
  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Thalapathy Vijay, Director S.A.Chandrasekar, Filmmaker S.A.Chandrasekar

  அடுத்த செய்தி