மூத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் யூ-ட்யூபில் வெளியிட்ட தனது வாழ்க்கை வரலாறு, ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவர் எஸ்.ஏ.சந்திர சேகர். 1981-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது வாழ்க்கை வரலாற்றை யார் அந்த எஸ்.ஏ.சி என்ற தனது யூட்யூப் பக்கத்தில் வீடியோவாக பதிவேற்றி வருகிறார். அதன் முதல் பகுதி வீடியோவில் சென்னை தி.நகர், பாண்டி பஜார் நடைப்பாதையில் பாய் விரித்து அதில் அமர்ந்து பேசியுள்ளார். இரவு நேர நடைபாதையில் தனது வாழ்க்கை தொடங்கிய கதையை இரவு நடை பாதையிலேயே அவர் அமர்ந்து பேசியுள்ள காணொளி தற்போது இணையதளத்தில் அதிகம் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய்யின் பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா தேதி இதுதான்... உற்சாகத்தில் ரசிகர்கள்!
தனுஷுடன் ஏற்பட்ட பிரிவு... செல்வராகவன் படத்தைப் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!
உதவி இயக்குனராக பணியாற்றிய போது நடைமேடையில் ஓய்வெடுத்து பணிக்கு சென்று வாய்ப்பு தேடிய கதையை எஸ்.ஏ.சி இந்த வீடியோவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.