முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'வாரிசு படத்தை விஜய்யுடன் பார்த்தேன், நாங்க அடிக்கடி பேசிக்கமாட்டோம்...'' - எஸ்.ஏ.சந்திரசேகர் சுவாரசியத் தகவல்

'வாரிசு படத்தை விஜய்யுடன் பார்த்தேன், நாங்க அடிக்கடி பேசிக்கமாட்டோம்...'' - எஸ்.ஏ.சந்திரசேகர் சுவாரசியத் தகவல்

எஸ்.ஏ.சந்திரசேகர் - விஜய்

எஸ்.ஏ.சந்திரசேகர் - விஜய்

தனக்கும் விஜய்க்குமான உறவில் விரிசல் இல்லை என்றும் ஒன்றரை வருடத்துக்கு முன் ஏற்பட்ட சிறிய பிரச்னையை மீடியாக்கள் பெரிதுபடுத்துகின்றன என்றும் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் மனக்கசப்பு காரணமாக பேசிக்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. விஜய்யின் அனுமதியில்லாமல் அவரது பெயரில் தனிக்கட்சி துவங்க எஸ்.ஏ.சந்திரசேகர் முயற்சித்ததே இருவருக்கும் பிரச்னை ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது. வாரிசு பட இசை வெளியீட்டு விழாவிலும் தனது அப்பா அம்மாவை விஜய் மதிக்காமல் நடந்துகொண்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியில் விஜய் குறித்து பேசியிருக்கிறார். அதில் தனக்கும் விஜய்க்குமான உறவில் விரிசல் இல்லை என்றும் ஒன்றரை வருடத்துக்கு முன் ஏற்பட்ட சிறிய பிரச்னையை மீடியாக்கள் பெரிதுபடுத்துகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும் வாரிசு படத்தை விஜய்யுடன் இணைந்து பார்த்ததாகவும் எப்போதும் விஜய்யும் நானும் அன்பை வெளிப்படையாக காட்டிக்கொள்வதில்லை என்றும் அடிக்கடி பேசிக்கொள்வதில்லை என்றாலும் எங்கள் அன்பு உறுதியானது என்றும் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay