• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எனக்கும் விஜய்க்கும் இடையே பிரச்சனைகள் இருக்கின்றன- மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்

எனக்கும் விஜய்க்கும் இடையே பிரச்சனைகள் இருக்கின்றன- மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்

எனக்கும் மகன் விஜய்க்கும் இடையே பிரச்னைகள் இருக்கின்றன. அது எங்களோட குடும்ப கதை என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நடிகர் விஜயின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்க்கும், எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையில் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவது உண்டு. விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று எஸ்.ஏ.சந்திரசேகரின் விருப்பம். ஆனால், விஜய் அதில் ஈடுபாடு காட்டாமல் தவிர்த்துவருகிறார். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியைப் பதிவு செய்தார். எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்தச் செயலில் விஜயை ஆத்திரமூட்டியது.

    அதனையடுத்து, எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கியுள்ள கட்சிக்கும் (Political Party) எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது ரசிகர்கள் எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை கட்சியில் இணைத்துக் கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். கட்சிக்கும் நம் இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று விஜய் அறிவித்தார்.

    இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், திரைப்பட நிகழ்வில் பேசிய எஸ்.ஏ.சந்திர சேகர், ‘தெலுங்கு படத்தில் நிறைய சம்பளம். சமுத்திரக் கனி அதனால் தமிழ் படத்தை மறந்துவிடாதீர்கள்.

    நடிகை இனியாவிற்கு ஒரு படி மேலே ஷாக்சி அகர்வால். துப்பாக்கி நான் ஆரம்பித்த படம். தவிர்க்க முடியாத காரணத்தினால் நான் அதை தொடர முடியவில்லை. தாணு தயாரித்தார். விஜய்க்கு மிகப் பெரிய வியாபாரம் செய்து கொடுத்த படமும் அதுவே. விஜய் முதலில் சமூகம் சமூகம் என்று சமூகம் சார்ந்த படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். முதலில் இளைஞர்கள் மத்தியில் இடம் பிடிக்க இளைஞர்களை கவரும் வகையில் படங்கள் செய்தேன். சமூக நோக்கத்தோடு ஒவ்வொரு இயக்குனரும் இருக்க வேண்டும். உண்மையை பயப்படமால் உரக்க சொல்ல வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஊடகங்கள் உண்மையை சொல்ல வேண்டும். நடக்குற தவறுகளை உரக்க சொல்ல வேண்டும். விஜய் பெயர் எப்படி பெயர் வந்தது என்று நான் கூறியதை திரித்து சொல்லியிருக்கிறார்கள். எனக்கும் என் மகன் விஜய்க்கும் பிரச்சினைகள் இருக்கிறது. அது எங்களோட குடும்ப கதை. குடும்பம் என்றால் பிரச்சனை இருக்க தான் செய்யும். அதை ஏன் எல்லோரும் பேச வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: