Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆயில் மசாஜ் ஆர்வத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.வி.சேகர்

ஆயில் மசாஜ் ஆர்வத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.வி.சேகர்

எஸ்.வி.சேகர்

எஸ்.வி.சேகர்

எல்லாவற்றுக்கும் காரணம் என் ஆர்வக்கோளாறால் எண்ணெய் மசாஜ் செய்ததால் ஏற்பட்ட விளைவு தான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் தான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மூத்த நகைச்சுவை நடிகர் எஸ்.வி சேகர் தமிழ் மேடை நாடக நடிகர்களில் முக்கியமானவர். பல தமிழ் படங்களில் ஹீரோவாகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். அரசியலில் நுழைந்து பாஜக-வில் செயல்பட்டு வரும் அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

"திடீரென கடுமையான வாந்தியுடன் கடுமையான தலைசுற்றலுடன் ஆர்.ஏ.புரத்திலுள்ள மெட்ராஸ் இஎன்டி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டேன். எல்லாவற்றுக்கும் காரணம் என் ஆர்வக்கோளாறால் எண்ணெய் மசாஜ் செய்ததால் ஏற்பட்ட விளைவு தான். கடவுள் அருள் மற்றும் டாக்டர் மோகன் காமேஸ்வரனால் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். இப்போது வீட்டிலேயே முழு ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் நாம் ஒரு பாடம் கற்றுக்கொள்கிறோம். இந்த முறை எந்த விலையும் இல்லாமல் NOMORE OIL MASSAGES. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி" என்று அவர் தனது முகநூலில் தெரிவித்திருக்கிறார்.

புதிய போஸ்டருடன் வாரிசு படத்தின் அட்டகாச அப்டேட்... மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

எஸ்.வி.சேகரின் அந்த பதிவில் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tamil Cinema