ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இசையுலகில் கலக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா?

இசையுலகில் கலக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா?

எஸ் தமன்

எஸ் தமன்

தமன் இசையில் வெளியான மெலடி பாடல் பல கோடி பேரால் இதுவரை கேட்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இன்றைய தேதியில் இந்திய சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருக்கும் ஒருவர்தான் இந்த குழந்தை. அவர் வேறு யாருமில்லை, எஸ்.தமன். ட்ரம்மராக இருந்து, உதவி இசையமைப்பாளராக வளர்ந்து, இசையமைப்பாளராக உயர்ந்து நிற்கிறார் தமன். சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அகண்டா, பீம்ல நாயக் படங்களின் வெற்றிக்கு தமனின் இசையின் பங்கு முக்கியமானது.

தமனின் இயற்பெயர் கண்டசாலா சாய் ஸ்ரீனிவாஸ். இவரது தந்தை கண்டசாலா சிவகுமார் புகழ்பெற்ற ட்ரம்மர். தெலுங்கு, கன்னடப் படங்களில் கொடிகட்டிப் பறந்த இசையமைப்பாளர் கே.சக்ரவர்த்தியிடம் 700 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். தமனின் தாத்தா கண்டசாலா பாலராமையா தெலுங்கின் குறிப்பிடத்தகுந்த இயக்குனர். படங்கள் தயாரித்திருக்கிறார். நடிக்கவும் செய்துள்ளார். நடிகர் நாகார்ஜுனாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும் இவரே. தமனின் அம்மா சாவித்ரி பின்னணி பாடகி.

Cook With Comali 3 : இதை செய்யாமல் என் உயிர் போகாது.. பாலா உருக்கம்!

குடும்பம் முழுவதும் சினிமாவுடனும், இசையுடனும் தொடர்புடையதாக இருந்ததால் சினிமாவும், இசையும் தமனை சின்ன வயதிலேயே பற்றிக் கொண்டது. அப்பாவிடமிருந்து ட்ரம்ஸ் மீதான விருப்பம் தொற்றிக் கொள்ள அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 2003 இல் தனது 20 வது வயதில் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமானார். ட்ரம்ஸ் வாசிக்கும் திறமையே அந்தப்பட வாயப்பை பெற்றுத் தந்தது.

ஷங்கரின் அறிமுகமாக இருந்தும் நடிப்பை விரும்பாமல் இசையில் கவனம் செலுத்தினார். 2009 இல் அவர் இசையமைத்த மல்லி மல்லி தெலுங்குப் படம் வெளியானது. அதேவருடம் தமிழில் சிந்தனை செய் படத்துக்கு இசையமைத்தார். ஆரம்பகாலத்தில் ஈரம்,  மாஸ்கோவின் காவேரி, தில்லாலங்கடி என நிறைய தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார்.

கிக், பிருந்தாவனம், தூக்குடு, பாடிகாட், பிசினஸ்மேன், நாயக், பாட்சா, ராமையா வஸ்தாவையா, ரேஸ் குர்ரம், சரைனைடு போன்ற படங்கள் தமனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன.. சமீபமாக தமன் இசையில் வெளிவந்த ஆல வைகுந்தபுரமுலு, வக்கீல் சாப், அகண்டா, பீம்ல நாயக் என அனைத்தும் ஹிட். மகேஷ்பாபு நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் சர்க்காரு வாரி பாட்டா படத்துக்கும் தமன்தான் இசை. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படம், சிரஞ்சீவியின் காட்பாதர், சிவகார்த்திகேயனின் புதிய படம், விஜய்யின் 66 வது படம் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார்.

ட்ரம்மராக இருந்து, உதவி இசையமைப்பாளராக உயர்ந்து, நடிகராக அறிமுகமாகி இசையமைப்பாளரானவர் தமன். நடிப்பு உள்பட அனைத்தையும்விட்டு தற்போது இசையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறhர். தெலுங்கு சினிமாவின் ஹீரோயிசத்துக்கு ஈடுகொடுத்து இசையில் தெறிக்கவிடுகிறவர் என்ற பெயரை தமன் சம்பாதித்துள்ளார். அத்துடன் பாடல்களிலும் தமன் கவர்கிறார். சார்க்காரு வாரி பாட்டா படத்தில் தமன் இசையில் வெளியான மெலடி பாடல் பல கோடி பேரால் இதுவரை கேட்கப்பட்டுள்ளது.

janaki amma: திரையிசை பாடகர்களில் மகுடம்சூடா மகாராணி எஸ். ஜானகி பிறந்தநாள்!

பின்னணி இசை, பாடல் என இசையின் இரு துருவங்களிலும் சாதனை படைப்பதால்தான் ஷங்கர் போன்றவர்களின் படங்களில் வாய்ப்பு தேடி வருகிறது. இன்றைய தேதியில் தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர் தமன் என்று சந்தேகமின்றி கூறலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Sreeja
First published:

Tags: Kollywood, Tamil Cinema, Tollywood