Home /News /entertainment /

டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு எஸ்.பி.பி போட்ட நெகிழவைக்கும் நிபந்தனை: தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்..

டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு எஸ்.பி.பி போட்ட நெகிழவைக்கும் நிபந்தனை: தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்..

எஸ்.பி.பி.யுடன் ஸ்வப்னா தத்

எஸ்.பி.பி.யுடன் ஸ்வப்னா தத்

டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கேட்டு எஸ்.பி.யை அணுகிய போது அவர் விதித்த சிறந்த நிபந்தனைகள் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) வெள்ளிக்கிழமை காலமானார்.

இதயம், மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரது மறைவு திரைத்துறையினர் உட்பட நாட்டு மக்களையே சோகத்தில் ஆழ்த்தியது.

குடியரசுத் தலைவர், இந்திய பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். அதேவேளையில் அவருடன் இணைந்து பணியாற்றிய திரைத்துறையினர் பலரும் தங்களது நினைவுகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ”எனக்கு இப்போதும் அவர் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் இருக்கின்றன. குழந்தைகள் பாடல் பாடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவரிடம் அனுமதி கேட்க சென்றிருந்தேன். அப்போது அவர் ஒரு கட்டுப்பாடு விதித்தார். அது என்ன என்றால் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஒரு குழந்தை கூட அழுவதை நான் அனுமதிக்கமாட்டேன். அப்படியே அழுதாலும் அவர்களை படம்பிடித்து டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக அந்த அழுகையை பயன்படுத்தக்கூடாது” என்றார் எஸ்.பி.பி.




அவர் சொன்னதை நான் முழுதாக ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி அவரது பார்வை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மீதான எனது பார்வையையும் மாற்றியது. எனது குழந்தைகள் மற்றும் அடுத்தடுத்து வரும் தலைமுறைக் குழந்தைகள் உங்களுக்கு எப்போதும் நன்றிக் கடன் பட்டிருப்பார்கள்” இவ்வாறு தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published:

Tags: S.P.Balasubramaniyam

அடுத்த செய்தி