மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் கல்லறையில் ரசிகர்கள் அஞ்சலி செலுத்த சிறப்பு ஏற்பாடு

எஸ்,பி.பி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் கல்லறையில் ரசிகர்கள் அஞ்சலி செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
தன் வசீகர குரலால் ரசிகர்களைக் கவர்ந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 25-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், திரைத்துறையினர், விளையாட்டுத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் அமைந்த அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி.பியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.அந்த இடத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட நபர்களே எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு ரசிகர்கள் வந்திருந்தனர். இதனிடையே பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பியின் கல்லறைக்கு செல்ல சிரமம் இருந்த நிலையில் அதனைப் போக்கும் விதமாக தனி வழி ஏற்படுத்தி எந்த நேரத்திலும் அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தனி வழி ஏற்படுத்தித் தந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க: விஜய் போல் குட்டிக் கதை சொன்ன ‘இரண்டாம் குத்து’ டீம் - டீசர் ரிலீஸ்

தான் இறப்பதற்கு முன்பாக கடந்த ஜூன் மாதம் சிற்பி ராஜ்குமார் உடையாரிடம் தனது சிலையை வடிக்கச் சொல்லியிருந்தார். அந்த சிலையின் பணிகள் முடிக்கப்பட்டிருக்கும் நிலையில் எஸ்.பி.பிக்கு கட்டப்படும் மணிமண்டபத்தில் அச்சிலை நிறுவப்படுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.
Published by:Sheik Hanifah
First published: